Header Ads



கிழக்கின் சகல பாடசாலைகளிலும் ஒரே வகையில் ஆண்டிறுதிக் கணிப்பீட்டுக்கான வினாத்தாள்


(அனாசமி)

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் சீரான அடைவினை ஏற்படுத்துவதற்கான முன்னோடித்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் மூன்றாந்தவணைப் இறுதிமட்டக் கணிப்பீட்டிற்கான வினாத்தாள் தயாரிப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதன் அடிப்படையில் ஆரம்பக்கல்வி வகுப்புக்களுக்கான வினாத்தாள் தயாரிக்கும் செயமர்வு, கடந்த வாரத்தில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் கிழக்கிலுள்ள 17கல்வி வலயங்களிலிருந்து வருகை தந்த ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சிரேஷட்ட ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட தொகுதியினர் திருகோணமலையிலுள்ள துளசிபுரம் மனித வளமேம்பாட்டு நிலையத்தில்(ர்சுனு) இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்திற்கான ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் தொடராக வதிவிடச் செயலமர்வாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாகாணக் பிரதிக்கல்விப்பணிப்பாளர்; திரு. மனோகரன் அவர்களும் கலந்து கொண்டார். அத்துடன் இம்முறை நடைபெறப்போகின்ற இறுதிமட்டக் கணிப்பீட்டுக்கான வினாத்தாள் முழுமையாக ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூலிருந்து கணிப்பீட்டுப் படிவத்திற்குள் உட்பட்டதாகவே அமையவுள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ள இவ்வினாத்தாள்;கள் கிழக்கிலுள்ள தமிழ், சிங்கள மாணவர்களின் அடைவினை கண்டறிந்து கொள்வதுடன், மாணவர்களின் அடைவுபற்றிய புள்ளிப் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்கும் இவ்வினாத்தாள் பெரிதும் துணைபுரியும் என்பதற்காகவும் கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.


3 comments:

  1. iiiyyoooo!
    sila zonnal education officekalin tholilill mannn vilunthiruchche....

    ReplyDelete
  2. athuumattumalla vinaa paper viyaapaarikalikkum adithaan.

    ReplyDelete
  3. ZDE-Sammanthurai will die to hearing this kind of good works.

    ReplyDelete

Powered by Blogger.