மூளையில் ரத்த உறைவை நீக்க நவீன ரோபோ
மூளையில் ஏற்படும் ரத்த உறைவை நீக்கும் நவீன ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்களால் தலையில் காயம் ஏற்படும்போது மூளையில் ரத்த உறைவு ஏற்படுகிறது. அதை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், புதுமையான முயற்சியாக தற்போது மூளையில் உறையும் ரத்தத்தை அகற்றும் புதிய ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மூளையின் உட்புறம் மிக ஆழமாக சென்று அங்கு உறைந்து கிடக்கும் ரத்தக் கட்டிகளை அகற்றுகின்றன. அதற்காக மிக நுண்ணிய ஊசிகள் ரோபோ மூலம் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரோபோவை அமெரிக்காவின் டென்னிசே மாகாணத்தில் நாஷ்வில் லேயில் உள்ள வாண்டர் பில்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ரோபோவின் கைகளில் மிக நுண்ணிய ஊசிகள் மாட்டப்படுகின்றன. அவை மூளையின் உட்புறத்தில் செலுத்தப்பட்டு உறைந்து கிடக்கும் ரத்தம் அகற்றப்பட்டு வெளியே உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் மிக சிறிய அளவிலேயே சேதம் ஏற்படும். இந்த ரோபோவை பல கோணங்களில் திருப்பி செயல்படுத்த முடியும்.
Post a Comment