Header Ads



முறைப்பாடுகள் தொடர்பான விளக்கம் கோரும் கலந்துரையாடல்

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர சபையில் கடமையாற்றுகின்ற காவலாளிகள் தொடர்பாக முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிபுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விளக்கம் கோரும் கலந்துரையாடல் இன்று (22.08.2013) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

காவலாளிகள் தினமும் வெவ்வேறு இடங்களில் கடமையில் ஈடுபடுவதனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இடம்பெறுகின்ற சம்பவம் மற்றும் களவு என்பவற்றிற்கு விளக்கம் கூறுகின்ற பொறுப்பு குறிப்பிட்ட ஒருவருக்கு இல்லாமல் இருப்பதனால் களவுகள் பிடிபடாமல் இருப்பதாகவும் காவலாளிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் இதன் போது முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

இதனை நிவர்த்திக்கும் வகையில் காவலாளிகளுக்கான புதிய கடமைப்பட்டியல் இதன்போது முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு காவலாளிகள் தங்களது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் முதல்வர் கேட்டறிந்து அவற்றை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு மாநகர அதிகாரிகளை பணித்தார்.

இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியல் வேலை மேற்பார்வையாளர் எம்.பாலசுப்ரமணியம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.ஹாறூன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.


No comments

Powered by Blogger.