முஸ்லிம்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுகாணவா போகின்றது - ஐ.தே.க. கேள்வி
(Vi) கடந்த 30 வருடகால யுத்த சூழலை அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்த முனைகின்றது. வெலிவேரிய சிங்கள மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காத அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவா போகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.
அரசியல் யாப்பில் மக்களின் உரிமைகள் பற்றி குறிப்பிட்டால் மட்டும் போதாது. நடைமுறையிலும் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை அனுபவிக்க வழிவகுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை தட்டிக்கழிக்கும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 14 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினால் மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு எந்த வித வேறு பாட்டையும் மறந்து ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDeleteThank you for your support Mr. Harsa de Silva.