சிலாபம் கடலில் மிதந்த கொள்கலனில் இந்தோனேசியா என பெயரிடப்பட்ட இறப்பர் கட்டிகள்
(Adt) ஆழ்கடலில் இருந்து சிலாபம் - கருகுபனே கரைக்கு இழுத்துவரப்பட்ட கொள்கலனில் இந்தோனேசிய நிறுவனத்திற்குச் சொந்தமான இறப்பர் கட்டிகள் காணப்படுவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச செயலாளர் முன்னிலையில் கருகுபனே கடற்கரையில் வைத்து குறித்த கொள்கலன் இன்று (29) பரிசோதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதில் இருந்து 1 அடி அகலமும் 2 அடி நீலமும் கொண்ட இறப்பர் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இறப்பர் கட்டிகளில் இந்தோனேசியா என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்கலனில் இருந்த இறப்பர் கட்டிகள் பொலிஸ் பாதுகாப்பில் சிலாபம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment