இங்கிலாந்தின் துணை இல்லாமல் சிரியா மீது தாக்குதல் நடத்த தயார் - பிரான்ஸ்
சிரியா மீது தாக்குதல் நடத்த தனது நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்துடன் பேசி போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு செய்தார்.
சிரியா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
இந்த தீர்மானம் தோல்வியடைந்தது தொடர்பாக கருத்து கூறிய அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹகெல், 'ஒவ்வொரு நாட்டுக்கும் சில விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளது. அந்நாடுகளின் பொறுப்பை நாங்கள் மதிக்கிறோம்' என்றார்.
அமெரிக்கா தங்கள் மீது தனித்தே கூட தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி சிரியா மக்களிடையே நிலவி வருகிறது.
டமாஸ்கஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அதிநவீன 'ஸ்கட்' ரக ஏவுகணைகள் மற்றும் ஏவு இயந்திரங்களை பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே, ஈரான் ராணுவ மந்திரி உசேன் டெகானுடன் இன்று தொலைபேசியில் பேசிய சிரியா ராணுவ மந்திரி பஹ்த் அல்-பிரெய்ஜ், 'வல்லரசுகளின் எவ்வித மூர்க்கத்தனமாக தாக்குதலையும் சந்திக்க சிரியாவும், சிரியாவின் மக்களும் தயாராக உள்ளனர்' என்று தெரிவித்தார். சிரியா அரசுக்கு சொந்தமான 'சனா' செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்கோயிஸ் ஹாலண்டே கூறியதாவது:-
'சிரியா மக்களின் மீது கடந்த 21ம் தேதி நடத்தப்பட்ட ரசாயன குண்டு தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மீண்டும் சரிப்படுத்த முடியாத தீங்கான நடவடிக்கை ஆகும்.
சிரியா மக்களுக்கு இந்த மிகப்பெரிய கொடுமையை இழைத்த செயல் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது. பஷர் அல்-ஆசாத் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இங்கிலாந்து பங்கேற்காவிட்டாலும் இது தொடர்பாக நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் தயாராக உள்ளது.
சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் தயாராக உள்ளபோதிலும், எங்களது தலையீட்டை நியாயப்படுத்துவதற்குள தேவையான சூழ்நிலை உருவாகும் வரை பிரான்ஸ் காத்திருக்கும்'.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment