வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற தமிழ் கூட்டமைப்பும், சில மத தலைவர்களும் தடை
(சிலாவத்துறையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தனித்து களம் இறக்கியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் தெரிவித்துவருவதானது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.இந்த துரேகத்தனத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதான கட்சி அலுவலகத்தினை (2013.08.24) சிலாவத்துறையில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அமைச்சர் அங்கு பேசுகையில் கூறியதாவது -
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது தாயக மண்ணில் மீள்குடியேற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுவருகின்ற போது, அதற்கெதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பும், அவரது பின்னணியில் இருக்கும் மத தலைவர்கள் சிலரும் செயற்பட்டு அதனை தடுக்க பார்க்கின்றனர்.மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்லாது வவுனியா மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்பாக நின்று இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக பிரைழயான தரவுகளை ஊடகங்களுக்கு காட்டி ஆர்ப்பாட்டங்களை செய்துவருகின்றனர்.
எவருக்கும் அநியாயம் செய்யாத வடபுலத்து முஸ்லிம்ளை மீண்டும் வடக்கில் இருந்து துறத்துவதற்கான சதித்திட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்துவருகின்ற போது,அதாற்கெதிராக போராடாமல் அக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்யும் வியூகங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வகுத்து செயற்படுகின்ற தகவல் கிடைததுள்ளது.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் சொன்னோம்,நாங்கள் ஓரணியாக போட்டியிடுவதன் மூலம் எமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ,ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.தனித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் வேட்பாளர்களை நிறுத்தி தோல்வியடைந்ததுடன் மட்டுமல்லாது,முஸ்லிம் தலைமைத்துங்களையும் இழக்கச் செய்தார்.
மன்னார் பிரதேச சபை,செட்டிக்குளம் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைகளின் அதிகாரங்களை சில வாக்கு வித்தியாசத்தில் இழக்க நேரிட்டது.இந்த தலைமைகள் இழக்கப்படுவதற்கு பிரதான காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருந்தது.அதே போன்று இந்த மாகாண சபை தேர்தலிலும் சேர்ந்து கேட்பதன் அவசியத்தை வலியுறுத்தினேன்.ஆனால் அதனையுளும் அவர் புறக்கணித்து,தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக வழி அமைத்து கொடுக்கும் வகையில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதைப்பதற்கு நடவடிக்கையெடுத்துள்ளார்.
இதனால் பாதிப்படையப் போவது ரவூப் ஹக்கீம் அல்ல,எமது வடமாகாண மக்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.கடந்த 22 வருடங்களாக எமது மக்கள் அகதிகளாகி பட்ட துன்ப,துயரங்களை ஒரு போதும் எம்மால் மறந்துவிட முடியாது,மீண்டும் அவ்வாறானதொரு இடப்பெயர்வு குறித்து நிணைததுப்பார்கக் கூட முடியாது.
எமது மாவட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் ஆளும் ஆட்சியில் இருப்பதன் மூலம் மட்டும் தான் முடியும் என்பது யதார்த்தமாகும்.எதிர்கட்சியில் அமர்ந்து எதனையும் சாதிக்க முடியாது.இந்த பதவிகள் அல்லாஹ்வால் தரப்படும் அமானிதங்கள் அவற்றை நாம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
எனது பதவிக்காலத்தில் மக்களின் விமேசானத்திற்காக அதனை பயன்படுத்திவந்துள்ளேன்.என்னிடத்தில் இனவாதம்,மதவாதம்,பிரதேசவாதம் என்பன இல்லை.எல்லா மக்களும் சமமானவர்கள்.இறைவனது படைப்பில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்றே பார்த்துவந்துள்ளேன்.இன்றும் கூட மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக் கொடுத்துவருகின்றேன்.எந்த சமூகத்திற்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டினையும் நான் செய்ததில்லை.
வீடமைப்பு திட்ங்கள்,மின்சார வசதிகள்,பாதை புனரமைப்புக்கள்,கல்வி சார் நடவடிக்கைகள்,நியமனங்கள் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் நேர்மைத் தன்மையுடன் செயற்பட்டுவருகின்றேன்.
இந்த தேரதலில் வெற்றி பெரும் ஆளும் கட்சியில் எமது பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படுவதன் மூலம் தான் வடமாகாண சபையில் இம்மாவட்ட மக்களது குரலாக அவற்றை அங்கு ஒலிக்கச் செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
Post a Comment