Header Ads



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜௌபர்



(ஹனீக் அஹமட்)



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஏ.எம். ஜௌபர் நியமிக்கப்பட்டுள்ளார். 



மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் கடமையாற்றிய டொக்டர் எம்.எம். தாஸிம் - அவரது பதவியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டமையையடுத்தே – குறித்த பதவிக்கு டொக்டர் ஏ.எம். ஜௌபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எம். தாஸிம் - அரசசேவை ஆணைக்குழுவினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



தற்போது பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் ஏ.எம். ஜௌபர் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

No comments

Powered by Blogger.