Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அஷ்ஷெய்க் அஸ்மினுக்கு அச்சுறுத்தல்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வடக்கின் பொது முஸ்லிம் வேட்பாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சிலரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவரது வீட்டிற்கு வருகை தந்த புலானாய்வுப் பிரிவினர் இவர் குறித்த விபரங்களை அக்கம் பக்கதவர்களிடம் விசாரித்துள்ளதோடு, எதற்காக இவர் த.தே.கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார் எனவும் கேட்டுள்ளனர், அதன் பின்னர் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லையில் அமைந்துள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்ற குறித்த புலானாய்வுப் பிரிவினர் தாம் பொலிஸில் இருந்து வருவதாகக் கூறி வேட்பாளர் குறித்த விபரங்களைப் பெற முயன்றுள்ளதோடு அவரது குடும்பத்தாருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் குறித்த எதற்காக அவர் த.தே.கூ வில் போட்டியிடுகின்றார் என்றும் வினவியுள்ளனர். 

10 comments:

  1. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷஷெய்க் அய்யூப் அஸ்மின் நளீமி அவர்கள் எதற்காக வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார் என்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் LLRC அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நாட்டின் தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான்.

    வடக்கிலிருந்து 1990களில் முற்று முழுதாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் வட மாகாணத் தமிழ் மற்றும் சிங்கள மக்களோடு நல்லுறவோடும், இன ஐக்கியத்தோடும் ஒன்றிணைந்து வாழச் செய்வதற்குத்தான்.

    வட மகாண சபைத் தேர்தலில் சிங்களப் பேரினவாதக் கட்சிகளான ஐ.ம.சு. முன்னணியிலும், ஐ.தே. கட்சியிலும் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் என்ன நோக்கத்திற்காகப் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய முற்படாத இந்தப் புலநாய்வுப் பிரிவினர், த.தே.கூட்டமைப்பில் போட்டியிடும் அய்யூப் அஸ்மின் நளீமியை மாத்திரம் ஏன் வடக்கிலிருந்து தெற்கு வரை முழு நீளத்தில் துருவித்துருவி ஆராய வேண்டும்?

    ஜனநாயக நாடெனச் சொல்லப்படும் இந்த இலங்கையில் ஒரு முஸ்லிம் ஒரு தமிழ்க் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியாதா? சோனகன் தேர்தலில் போட்டியிடுவதையுமா இந்த நாட்டில் பேரின சமூகம் அச்சுறுத்தி தடுக்கப் பார்க்கிறது?

    அஸ்மின் நளீமி அவர்களே..! அஞ்சற்க..!

    புலநாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் மேலும் தொடருமாயின் நீங்கள் இன்னொரு ஆஸாத் சாலியாக வடக்கில் பிறப்பெடுப்பீர்கள்!

    வடக்கிலும், கிழக்கிலுமாக பல நூறு முஸ்லிம் அஸ்மின்கள் த.தே. கூட்டமைப்பு வேட்பாளராகவும், பல்லாயிரம் முஸ்லிம்கள் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களாகவும் இணைவார்கள் என்பதும் திண்ணம்!

    அழ்ழாஹ் பெரியவன்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இது தேவயா உங்களுக்கு த.தே.கூ வில் எதை சாதித்து விடுவீர்கள்

    ReplyDelete
  3. இதெல்லாம் சும்மா பூச்சாண்டி சகோதரரே, இன்னும் எத்தனையோ செய்வார்கள். நாம் பனங்காட்டு நரிகள், இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது.
    நேர்மையாளர்களை அல்லாஹ் சோதிப்பான், கைவிடமாட்டான். நமது நல்ல முயற்சிக்கு இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  4. Saleem Naji அவர்களே!
    அபசகுனமாகப் பேசாதீர்கள்.
    இத்தனை காலமாக நமது வாக்குகளை அள்ளிச் சென்று பேரினக் கட்சிகளுக்குக் கொட்டிக் கொடுத்தவர்களும், நமது வாக்குகளை தனித்துவமாக பெற்றுச் சென்று பேரினவாதிகளுக்குக் கூட்டிக் கொடுத்தவர்களுமாகிய அவர்வளைப் பார்த்துக் கேழுங்கள் எதனைச் சாதித்தார்கள் என்று?

    ReplyDelete
  5. Rights allow all to go anywhere, he is not going againt the Sri Lankan constitution, The SL government, the Election Department of SL allowded the TNA to nominate at SL Provincial Election as it's a Democratic Party (TNA), then why they are going to threatened to them. Is it Democracy as they say? such cause would be forwarded to Amnesty International, UNO and other International Communities to look into the matters deeply. What is going in SL after the war?

    ReplyDelete
  6. Nobody vote for Traitors in the Government. No vote for Gutless, selfish Muslim politicians any more attached to the Zionist.
    We Only Vote for TNA.(it does not matter, if they force 'Ayyub' out of the contest, we will definiteley vote for Ayyappan in TNA ticket)

    ReplyDelete
  7. இது என்ன அச்சுறுத்தல் இன்னும் எவ்வளவோ இருக்கு.வார உரைகல் ஆசிரியர் சொல்வது போல் இன்னொரு ஆசாத் சாலியாகவோ அஷ்ரப் ஆகவோ முடியாது. ஆழம் தெரியாமல் காலை விட்ட கணக்குத்தான். கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் ஒரு அறிக்கையில் கூறுகிறார் இணைந்த வடக்கு கிழக்குத்தான் அவசியம். முன்னர் முஸ்லிம்கள் அச்சப்பட்டார்கள்.பின் அது சரி செய்யப்பட்டது என்று.
    இணைந்த வடக்கு கிழக்குக்குப்பிறகுதான் முஸ்லிம்கள் அதிக அச்சப்பட்டார்கள். கூட்டமைப்பினர் என்ன சொன்னாலும் இவர்களை இயக்குகின்ற ரிமோட் நாட்டுக்கு வெளியேதான் இருக்கு.

    எது எப்படியோ வட மாகான சபையில் பெரும்பாலும் கூட்டமைப்பு ஆட்சியைக்கைப்பற்றும்.அதன்பிறகுதான் வடக்கு முஸ்லிம்களுக்கும் இந்த சிறு பிள்ளை அரசியல் வாதிகளுக்கும் ஆகா நாம் ஏறியது முருங்கை மரம் என்று விளங்கும்.

    வரலாற்றில் தலைவர் அஷ்ரப் இன்னும் மறைந்த மாமனிதர்,மறைந்த தலைவர் என்றெல்லாம் பேசப்படுவது போல PMGG அரசியல் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்படுவார்கள். இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  8. May All mighty Allah bless you, for your strong words,

    ReplyDelete
  9. I know him ..Very Intelligent and a suitable candidate...

    May allah bless him

    ReplyDelete

Powered by Blogger.