Header Ads



ஆரிப் சம்சுடீனின் "வாழ்வின் ஒளி"


(சுலைமான் றாபி) 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டதிலிருந்து இனங்காணப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வாதரா அடிப்படைகளைக்கொண்ட குடும்பங்களுக்கும், விவசாயிகள், விவசாய அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள், paalar பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு இன்று 06.08.2013 வாழ்வாதார பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபைதவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஸ்.எம்.றியாஸ், சட்டத்தரணி அமீருல் அன்சார், உலமா பெருமக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், பயனாளிகள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் இலவச நீர்விநியோகதிற்கான வௌச்சர்கள், தையல் இயந்திரங்கள், எண்ணெய் தெளிக்கும் கருவிகள், மண்வெட்டிகள், விளையாட்டு உபகரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

1 comment:

  1. ஐயா புகைப்பட கலைஞ்சரே ....

    இதில் ஆரிப் சம்சுதீன் அவர்களை தவிர மற்ற எல்லாரையும் நன்றாக புகைப்படம் எடுத்துள்ளீர்கள்...

    ReplyDelete

Powered by Blogger.