Header Ads



நாட்டில் குற்றசெயல்கள் பெருகி, நீதிக்கான அநீதி அரசாள்கிறது - ஐக்கிய பிக்குகள் முன்னணி

(Nf) எதிர்பாராத வகையில் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் நீதிக்கான அநீதி அரசாள்வதாகவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவிக்கின்றது. மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அந்த முன்னணி இதனைக் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கெஸினோ வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு திட்டம் உள்ளதாகவும் நாட்டினுள் போதைப் பொருள் பாவனை விரைவில் அதிகரித்துச் செல்வதாகவும் அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்  நாட்டில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுத் தருமாறு போராடிய ரதுபஸ்வல பகுதி மக்களை துப்பாக்கி ரவைகள் மூலம் வரவேற்றமை கவலைக்குரிய விடயம் எனவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. 1978 ஆம் ஆண்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் மிக மோசமான பிரதிபலன் இதுவெனவும் அந்த முன்னணி கூறியுள்ளது.

எனவே அதனை உடனடியாக ரத்து செய்யும் தேவையை உணர்த்தும்  ஐக்கிய பிக்குகள் முன்னணி, மாதுலுவாவே சோபித தேரர் புத்திஜீவிகளுடன் இணைந்து முன்வைத்துள்ள அரசியலமைப்பு திருத்த மூலத்தை வரவேற்பதாகவும் கூறியுள்ளது.

நாட்டின்  ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காக பலமான எதிர்க்கட்சியொன்று இருக்க வேண்டிய போதிலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரினால் அது நிறைவேறாமையினால் அரசாங்கம் நினைத்தவாறு செயற்படுவதாகவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.