இஹ்வானுல் முஸ்லிமின் தலைவர்களை காட்டிக்கொடுத்தால் பரிசு
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மூன்று முன்னணி தலைவர்களையும் பாதுகாப்புப் படையினரிடம் காட்டிக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் எகிப்து பெளண்ட்களை (143,000 டொலர்) சன்மானமாக வழங்க ஐக்கிய அரபு இராச்சிய ஊடகவியலாளர் ஒருவர் முன்வந்துள்ளார்.
சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களான மொஹமட் அல் பல்தஜி, இஸ்லாம் அல் எரியன் மற்றும் சப்வாத் ஹெகாசி ஆகியோரை காட்டிக்கொடுப்பவர்களுக்கே இந்த சன்மானத்தை வழங்குவதாக ஹமத் அல் மஸ்ருயி அறிவித்துள்ளார்.
காட்டிக்கொடுப்பவர் பற்றிய ரகசியம் பேணப்படும் என்றும் அனைத்து எகிப்தியருக்கும் இந்த பரிசுத்தொகை காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எகிப்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
Post a Comment