Header Ads



இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்

(TL) இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலாமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட அரைக்கோளத்திலிருந்து தென் அரைக்கோளத்திற்கு நாளை 27 ஆம் திகதி  முதல்   செப்டெம்பர் 8 ஆம் திகதிவரை சூரியன் பயணிக்கவுள்ள இக்காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் அதிக உஷ்ணமாக  இருக்குமென  வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


27 தொடக்கம் 31 வரை வடகிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் ,  சாவகச்சேரி ,  முகமாலை ,  குமுழமுனை ,  கொக்காவில் ,  முல்லைத்தீவு ,  மன்னார் ,  புளியங்குளம் ,  புல்மோட்டை ,  மறிச்சுக்கட்டி ,  தந்திரிமலை ,  ஹொரவப் பொத்தனை ,  திருகோணமலை பகுதிகளில் அதிக உஷ்ணமாயிருக்கும்.

அதேபோல் செப்டெம்பர் ஒன்று  தொடக்கம் எட்டு வரை தென் ,  தென்மேற்கு,  தென்கிழக்கு மாகாணங்களில் கலாஓயா ,  தலாவ ,  அழுத்ஓயா ,  காரைத்தீவு ,  கதிரவெளி ,  மங்காளாவெளி ,    மகா ,  தம்புள்ளை ,  திம்முலாகல ,  மாதம்பை ,  குருநாகல் ,  மாத்தளை கிரண்ருகோட்டடே ,  சீதுவ ,  உலப்பனை ,  வலப்பனை ,  வெதிங்கள ,  திருக்கோவில் ,  ஈகொடஉயன ,  கிரிஎல்ல ,  ஹல்துமுல்ல ,  புத்தளபாணம ,  மஹாஇந்துகுவை ,  புத்கந்தை ,  தெளியவில ,  தங்காலை ,  காலி ,  யால கதிர்காமம் மற்றும் நெலுவ பகுதிகளிளும் அதிக உஷ்ணமாக காணப்படும். 

2 comments:

  1. Ivanugal Parkura Vela Appadiya Athuthan Eni Keelala Varum.

    ReplyDelete

Powered by Blogger.