அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்ய ஏற்பாட்டில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயிற்சி
(ஹாதி)
அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற றமழான் கால மாணவர்களுக்கான பகுதி நேர இஸ்லாமிய விழிப்புணர்வு பயிற்சியின் போது கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் (2013.08.03ம் திகதி) நடைபெற்றது. ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவின்;; தலைவர் எம்.ஏ.முபீன் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஜ்மல் (நளீமி), டாக்டர் ஏ.சி.அப்துல் றசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் போது நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ், பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் பங்குபற்றி முதாலமிடத்தினைப் பெற்றுக் கொண்ட மாணவனுக்கு கலாச்சார உத்தியோகத்தரினால் பரிசு வழங்கப்படுவதனையும்இ டாக்டர் ஏ.சி.அப்துல் றசாக் சித்தி பெற்ற மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்குவதனையும் கலந்து கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment