தொண்டையில் சிக்கிய மீன் முள்ளு போன்று அரசிற்கு தலையிடியாக ரவூப் ஹக்கீம்
(Hafeez)
தனது தொண்டைக் குழியில் சிக்கிய மீன் முள்ளுப் போல் இன்று அரசிற்கு ஒரு தலையிடியாக அமைச்சர் றவூப் ஹகீம் விளங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும் முன்னநாள் மாகாண சபை அங்கத்தவருமான ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்தார். (27.8.2013) மடவளை இளைஞர்கள் மற்றும் விளையாட்டு சங்க அங்கத்தவர்களுடனான ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
சில முஸ்லிம் தலைவர்கள் எமது கட்சியைப் பாத்துக் கூறும் முக்கிய ஒரு குறைதான் நீங்கள் தொடர்ந்தும் அரசுடன்தானே ஒட்டிக் கொண்டிருக்கறீர்கள். நாங்கள் அரசிற்கு வாக்களிப்பதும் உங்களுக்கு வாக்களிப்பதும் ஒன்று தானே எனக் கேட்கிறார்கள். அது தவறாகும். ஏன் நாம் அரசில் இருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறி எம்மால் எதனைச் சாதிக்க முடியும். அரசை வீழ்த்த முடியுமாயின் நாம் வெளியேறினால் பரவாய் இல்லை. நாம் ஏழு பேர் வெளியானால் இன்னும் 14 பேர் உள்ளே போகக் காத்திருக்கும் காரணத்தால்தான் எம்மை வெளியேறும்படி வற்புறுத்து கின்றனர். நாம் அப்படி வெளியேறத் தேவையில்லை.
அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுத்து அதனூடாகச் சில சட்ட மூலங்களை நிறைவேற்ற பங்காளியாக இருந்து விட்டு வெரும் கையுடன் ஏன் நாம் வெளியேற வேண்டும். இன்று எமது அமைச்சர் றவுப் ஹகீம் அரசிற்கு ஒரு சவாலாக உள்ளார்.
அவர் தொண்டையில் சிக்குண்ட மீன் முள் மாதரி அரசுடன் இருக்கறார். அரசுக்கு அவரை வெளியேற்றவும் முடியாது. அவர் வெளியேறவும் மாட்டார். முடிந்தளவு உள்ளே இருந்து நல்லதைச் செய்வோம். வெறும் வீர வசனங்கள் பேசி வெளியேறத் தேவையில்லை. அப்படி வெளியேறி எம்மால் எதையாவது உருப்படியாகச் செய்ய முடியுமா? சந்திரிகா பண்டாரநாயக்காவின் அரசின் இறுதிக்கட்டத்தில் இருந்த சூழ்நிலை வேறு. இன்றை சூழ்நிலை வேறு. அன்று அவ்வாறு வெளியேறி அரசை ஆட்டம் காண வைக்க முடிந்தது. இன்ற அதனைச் செய்ய முடியாது. எனவே வெளியேறுவதில் பயன் இல்லை.
ஒரு சமூகத்தின் பாதுகாவலர்கள்தான் இளைஞர்கள். எனவே இன்று இங்கு துடிப்புள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களை காணும் போது எனக்கும் துடிப்பும் துணிவும் ஏற்படுகிறது.
முஸ்லிம்கள் தொடர்ந்தும் பல்வேறு கட்சிகளாலும் அரசியல் ரீதியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றனர். எனவே இன்றைய எமது பின்னடைவு எமது கையால் ஆகாத தன்மையல்ல. இதற்கு ஒரே வழி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பது. இதற்கு ஒரே வழி நாம் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் இணைந்து எமது பிரதி நிதிகளை நாமே தெரிவு செய்து கொள்வது. பேரினவாதக் கட்சிகளை நம்பி ஏமாற வேண்டாம். முஸ்லிம்களது பலத்தை நாம் தனியே வேறாகக் காட்ட வேண்டுமானால் தனியே மரச்சின்ன்த்திற்கு வாக்களிக்க வேண்டும். பெரிய கட்சிகளுடன் இணைந்து வாக்களிப்பதால் எம்மை வேறு பிரத்துக் காட்ட முடியாது.
இளைஞர் சங்கங்களை நாம் உறுதியாக்கி பல்வேறு விளையாட்டுத்துறைகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். இன்று சில இடங்களில் விளையாட்டு அமைப்புக்கள் இல்லாத காரணத்தால் இனைஞர்கள் வழி தவறியுள்ளனர். விளையாட்டு கழகங்கள் உள்ள கிராம இளைஞர்கள் ஒரு அணியாக இணைந்து எப்பொழுதும் ஒரு குழுவாகத் தொழிற் படுவதன் காரணமாக அவர்கள் வழி தவறும் விகிதம் குறைந்து காணப் படுகிறது.
ஒரு அரசியல் வாதி எதையும் இழக்க விரும்புவான். ஆனால் அவனது வாக்காளர்களை இழக்க விரும்பமாட்டான். அந்த அடிப்படையில் நான் உடுநுவரைப் பிரதேச சபையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தலைவரானவன். மாகாண சபையில் அதனை விடவும் வாக்குகள் பெற்று ஒரு அங்கத்தவனானவன். எனது வாக்குகளை நான் தொடர்ந்தும் தக்வைத்துள்ளேன். எனவே எனது வெற்றி உறுதியானது.
எனக்கு பக்க பலமாக ஒருவர் தேவைப் படுகிறார். அவர் கல்வி அறிவு படைத்த எனக்கு வழிகாட்டக் கூடியவராக இருக்க வேண்டும். அந்த வகையில் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியரான மடவளையைச் சேர்ந்த அல்ஹாஜ் ஜே.எம்.யாசீன் எனக்கு துணைவராக தெரிசெய்யப் படுவாராயின் அது மிகப் பொருத்தம் எனக் கருதுகின்றேன். எனவே இவரையும் மத்திய மாகாண சபைக்கு அனுப்ப சகல கண்டி மாவட்ட முஸ்லீம்களும் உதவ வேண்டும் என கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அப்போ உங்களுக்கு அறிவு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்
ReplyDelete