அமைச்சர் மேர்வின் சில்வாவின் நியாயமான ஆத்திரம்
வெலிவேரிய சம்பவம் தொடாபில் அரசியல்வாதிகள் மௌனம் காத்து வருவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிலர் மௌனம் காத்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் அவர்களது பெயர் விபரங்களை வெளியிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தொழிற்சாலைக்கு எதிராக குரல் எழுப்ப எவரும் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செல்வந்தர்களுக்கு எதிராக குரல் கொடுக்க அஞ்சுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா பிரதி மேயரும் தாமும் இணைந்து இந்த தொழிற்சாலையை இரண்டு நாட்களுக்கு மூடியதாகத் தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். களனியையும் கம்பஹாவையும் விட்டு விலகப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது சேவையை எதிர்பார்க்கின்ற போது எவராலும் தம்மை விரட்டியடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்திற்கு தாம் அவசியமா இல்லையா என்பதனை ஓர் தேர்தல் நடாத்தி முடிவு செய்ய முடியும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். gtn
அடடா நாளாக நாளாக தலைவரோட உள் எண்ணம் மக்களுக்கு நல்லதையே பேசவேண்டுமென்று அடிக்கடி இப்படி அனியாயத்துக்கு நல்லமனிசானா ஆகிட்டாரோ என்று எண்ணுது, கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் மழை ஏதும் பேஞ்சதும் சாயம் வெளுட்துபோகுதா என்று.
ReplyDelete