Header Ads



முஸ்லிம் கலாசார திணைக்களம் வழங்கிய பேரீச்சம்பழத்திலும் சிக்கல்..!

முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊழியர்களுக்கு பாவிக்க முடியாத, உழுத்த பேரிச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளதனையிட்டு முஸ்லிம் சேவை ஊழியர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊழியர்களுக்கு 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ் ஆண்டே பேரிச்சம் பழம் வழங்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டிற்கு முன்னர் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர்களாக இசட்.எல்.எம்.முகம்மட் மற்றும் பௌசுல் ஹசன் ஆகியோர் கடமையாற்றிய காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் முஸ்லிம் சேவை ஊழியர்களுக்கு உண்ணக்கூடிய சிறந்த பேரிச்சம்பழம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இருந்தபோதிலும் நான்கு வருடங்கள் தொடராக பேரிச்சம் பழங்கள் வழங்கப்படவில்லை. 2013 இவ்வருடம் வழங்கப்பட்ட பேரிச்சம் பழம் தரம் குறைந்த, உழுத்துப்போய் பழுதடைந்த உண்ண முடியாத பேரிச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பேசிச்சம் பழத்தை பெற்றுக்கொண்ட முஸ்லிம் சேவை ஊழியர்கள் சிலர் மீண்டும் முஸ்லிம் சேவையிடம் திருப்பிக்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முஸ்லிம் கலாசார திணைக்களப் பணிப்பாளரிடம் சில ஊழியர்கள் வினவிய போது தரம் குறைந்த பேரிச்சம்பழம் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பேரிச்சம்பழம் வழங்குவதற்கு முன்னர் அவற்றின் தரத்தை உரிய அதிகாரிகள் பரிசோதித்துப் பார்த்துவிட்டே முஸ்லிம் சேவைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் அத்தோடு அவற்றை பெற்றுக்கொண்ட முஸ்லிம் சேவையின் அதிகாரிகள் கூட அவற்றின் தரத்தை பரிசோதித்திருக்கவேண்டும் எனவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறாவண்ணம் உரிய இரண்டு தரப்பு அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் முஸ்லிம் சேவை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. முஸ்லிம்களுக்குள்ளேயே முஸ்லிம்களை குழப்புவதற்கு அரசாங்கம் செய்த வேலையா? அல்லது முஸ்லிம்களிடையே உள்ள கருப்பு ஆடுகளின் வேலையா? கண்டிப்பாக இது யாரால் ஏற்பட்டது என்பதை பார்க்காமல் விடக்கூடாது.

    ReplyDelete
  2. சோமாலியாவில் பசியால் ஒரு சமூகமே மடிந்து கொண்டிருக்கிறது, நம் நாட்டிலுல் எத்தனையோ ஜீவன்கன் பட்டினியுடன் நோன்பு பிடிக்கின்றன இதன் போது இவா்களுக்குஇது ஒரு பிரச்சினையா????????

    இது சாதாரணமாக சொல்லி விட்டு விட வேண்டிய விடயம். SLBC என்றதற்காக உலகிற்கு சொல்ல வேண்டியதில்லை.

    இதைவிட பல ஊா்களுக்கே பழுதான ஈத்தம் பழங்கள் வழங்கப்பட்ட வரலாறுகள் உண்டு. இந்த ரமரானில் அதுவும் இல்லாமல் எம் ஊர்கள்............ முல்லையான்

    ReplyDelete

Powered by Blogger.