பரீட்சைகள் திணைக்களம் முஸ்லிம்களை புறக்கணிக்கிறதா..?
(எம்.எம்.ஏ ஸமட்)
க.பொ.த உயர்தரப்பரீட்சை பௌதீகவியல் பாடவிடைத்தாள் மதிப்பட்டுக் குழுவிற்கான மேலதிக பிரதம பரீட்சகர் பதவி நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றுஞ்சாட்டுகிறது.
இத குறித்து சங்க்தின் தலைவர் எம் அனஸ் தெரிவிக்கையில்,
க.பொ.த உயர்தரப்பரீட்சை பௌதீகவியல் பாடவிடைத்தாள் மதிப்பட்டுக் குழுவிற்கான மேலதிக பிரதம பரீட்சகர் பதவி நியமனத்தில் அநீதி. இழைக்கப்பட்டு. இன விகிதாசாரம் பேணப்படவில்லை, இது தொடர்பில் சங்கம் பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 5அம் திகதிமுதல் நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதீக வியல் பகுதி-ஐக்;கான பரீட்சை 10ஆம் திகதியும், பகுதி-ஐஐக்கான பரீட்சை 13ஆம் திகதி யும்; நடந்து முடிந்;துள்;ளது. இப்பாடம் உள்ளிட்ட உயர்தரப் பாடவிடைத்தாள் மதிப்பீட் டுக்கான முதலாம் கட்டப்பணி எதிர்வரும் 27ஆந் திகதி முதல் செப்டம்பர் 03ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்த உயர் தரப்பரீட்சைக்கு மதிப்பட்டு குழு ஒவ்வொன்றிற்கும் மேலதிக பிரதம பரீட்சகர் நியமிக்கும் திட்டத்தின்கீழ், பௌதீகவியல் பாட மதிப்பீட்டுக்குழு ஒவ்வொன் றிற்கும் ஒவ்வொரு மேலதிக பிரதம பரீட்சகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் மொழிமூல விடைத்தாள் மதிப்பட்டுக்கென கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய நகரங்களில் தலா ஒரு நிலையமும் யாழ்ப்பாணத்தில் 2 நிலைய மும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி மூல நிலையங்களில் ஒன்றிற்குத்தானும் மேலதிக பிரதம பரீட்சகராக ஒரு முஸ்லிமும் நியமிக்கப்படவில்லை.
இது உயர்தரப்பாட விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியில் ஈடுபடும் முஸ்லிம் ஆசிரியர்க ளுக்குச் செய்யும் பெரும் அநீதியும், புறக்கணிப்புமாகும். அதிலும் மிக அதிக முஸ்லிம் பாடசாலைகளையும், ஆசிரியர்களையும் கொண்ட கல்முனை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்குக்கூட கல்முனையில் இருந்து ஒரு முஸ்லிம் நியமிக்கப்படாமல் மட்டக்களப்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள சங்கம்,
அத்துடன், இனவிகிதாசாத்தைப் பேணும் வகையில், தமிழ்மொழிமூல பௌதிகவியல் பாடமதிப் பீட்டுக் குழுவின் மேலதிக பிரதம பரீட்சகர்களில்; முஸ்லிம் ஆசிரியர்களின் பிரதி நிதித்துவத்தையும் உறுதிப்படுத்துமாறு பரீட்சை ஆணையாளரைக் கோரியுள்ளது அவர் மேலும் குறிப்பிட்டார்
Post a Comment