Header Ads



கிழக்கில் முதற்தடவையாக ஸ்பிரிங்வெல் எனும் நவீன நீர்ப்பம்பி (படங்கள்)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நவீன  நீர் பம்பி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் பொறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நிறுவப்படவுள்ள ஸ்பிரிங் வெல் எனும் நவீன நீர்ப்பம்பி தற்போது முதற்கட்டமாக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் 7200 சதுர அடி பரப்பில் பொறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் ஸ்பிரிங் வெல் எனும் நீர்ப்பம்பி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் பூராக பொறுத்தப்படவுள்ளது. குறித்த நீர்ப்பம்பி யாரின் உதவியும் இல்லாமல் தானகவே மைதானம் முழுவதும் நீரை சரியான முறையில் பாய்ச்சும் என்பதுடன் செயற்கை முறையில் புல் வளர்ப்பதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. கிழக்கில் முதல்தடவை என்ற தலைப்பு அவ்வளவு பொருத்தமில்லை இது ஸ்ப்ரிங்வெல் அல்ல இது sprinkler,செயற்கை பம்பியுமல்ல ,இது குழாய் நீரை விசிறியடிக்கும் ஒரு சாதனம். அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைக்காக பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
    நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அழகான பூங்கா இதன்மூலம் நெடு நாட்களாக நீர்ப்பாசனம் பெறுகின்றது.

    ReplyDelete
  2. அரசியல் வாதிகள் அப்படித்தான் விளம்பரம் செய்வார்கள். சாதாரண சிறிய திட்டங்களையும் பெரிதாக காட்டினால் தான், பெரிய தொகையை இலாபமாய் பெற முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.