மத்திய மாகாண சபைத் தேர்தலில் அரச சொத்துகள் துஷ்பிரயோகம்
(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது அரச சொத்துகள் பெருமளவில் பாவிக்கப்படுகின்றன என்று சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பனிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
2013 08 06 ம் திகதி கண்டியில் இடம பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாரும் தெரிவித்தார்,
மாகாண சபை மூன்றுக்குமாக இடம்பெரும் தேர்தலில் மத்திய மாகாண சபைத் தேர்தலின் போதே அதிகமான அளவில் அரச உடமைகள் பாவிக்கப்படுகின்றன. அரச வாகனங்கள் பாவிக்கப்படுகின்றன. வீகள் பாவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் பாரிய வன்முறை சம்பவங்கள் இடம் பெறக் கூடிய அனைத்து முன் அடையாளங்களும் தென்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கள் செய்த பின் பாரிய அளவிலான ஊர்வலங்கள் இங்கு இடம் பெற்றன. பல நூற்றக்கனக்கான வாகனங்கள் அவைகளில் கலந்து கொண்டன. சட்டத்தை மீரிய அச் செயலை தடுத்து நிருத்த பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்டி மாவட்டத்தின் பிரதான பாதைகள் இரு புறத்திலும் சுமார் 95 பாரிய கட்டவுட்டுகள் கானப்படுகின்றன. அவைகளை அகற்ற பொலீஸார் இது வரையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாரான சூழ்நிலையில் நெர்மையான தேர்தல் ஒன்று நடைபெரும் என்று நினைக்க முடியாது என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
Post a Comment