சிரியா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் (வரைபடங்கள் இணைப்பு)
சிரியாவில் 426 சிறுவர்கள் உட்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கு இரசாயனத் தாக்குதலே காரணம் என்பது தெளிவானது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கா அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது.
அதேசமயம் சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாட்டை “காடையன் , கொலைகாரன்’ என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி வெளிப்படையாக சாடியிருப்பதுடன் பாரதூரமான குற்றங்களை இழைத்த இந்த சர்வாதிகாரியை அமெரிக்கா விட்டுச் செல்ல முடியாதென்று கடும் தொனியில் தெரிவித்திருக்கின்றார்.
சிரியத் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து ஐ.நா. ஆயுதப் பரிசோதகர்கள் வெளியேறியிருக்கும் நிலையில் அமெரிக்கா விடுத்திருக்கும் இந்த அறிக்கை எந்தநேரமும் தாக்குதல் நடத்துவதற்கான சமிஞையாக அமைந்திருக்கிறது.
கெரி கருத்துத் தெரிவித்திருந்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் “மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை’ குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரமான அளவுக்கு சிறுவர்களும் பெண்களும் அப்பாவிப் பொதுமக்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதை ஜேர்மனி நிராகரித்திருக்கிறது. அதேசமயம் வளைகுடாப் பிராந்தியத்தில் சிரிய ஆட்சியை அரபு லீக் கடுமையாக கண்டித்துள்ள போதிலும் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு அமெரிக்காவுக்கு கிடைக்குமா என்பது பற்றி தெளிவற்ற நிலமையே காணப்படுகிறது.

Eddie solvadarkku unakku enda aruhadyum illay ean enral needan evvalovo muslimgali konruvedday
ReplyDeleteAMERICA AND SAUDI ARABIA are behind this chemical attach
ReplyDelete