ஓட்டமாவடியில் சிறுவனின் உடல் கண்டெடுப்பு (படங்கள்)
(அனா)
ஓட்டமாவடி மடுவத்து வீதியில் இனந் தெரியாத சிறுவனின் சடலம் (22.08.2013) பிற்பகல் 4 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டு கற்களால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அப் பகுதிக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்ற ஒருவர் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார்.
இதே வேளை செம்மண்ணோடை கிராமத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் (வயது – 11) என்ற சிறுவனை கடந்த 17.08.2013ம் திகதியில் இருந்து காணவில்லை என்று 18.08.2013ம் திகதி வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட உடல் காணாமல் போன மீறா லெப்பை முஹம்மட் ஹிமாஸ் உடையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஆரம்பக் கட்ட விசாரனையில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி , மீரா வோடைப் பிரதேசத்தில் இது போன்ற சிறுவர் துஷ்பிரயோகங்களும், சிறுவர் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகின்றது...,
ReplyDeleteஇதற்கான தீர்வை பொதுமக்கள்தான் எடுக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பிள்ளைகளின் டியுசன் விடயத்தில் மிகவும் கவணிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.. நீங்களே அழைத்து செல்லுங்கள். நீங்களே அழைத்து வாருங்கள்.. அதுதான் சிறந்த பாதுகாப்பு