Header Ads



சிறைகளை நிரப்ப போகிறதாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ததஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"ததஜ சார்பில் திருச்சியில் நடைபெற்ற செயற்குழுவில்  ததஜ மாநிலத்தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீன் இட ஒதுக்கீடு குறித்து விளக்கிப் பேசினார்.

அதன்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி வரும் ஜனவரி 28 (28/01/14) அன்று தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய நான்கு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதே போல புதுவை சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீட்டை  செயல்படுத்த வலியுறுத்தி அதே தினத்தில் புதுவையிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது".  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்: அப்துல் ரஹ்மான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - செய்தி பிரிவு

4 comments:

Powered by Blogger.