Header Ads



இனவாதிகளை தோற்கடிக்க முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் - பிரதமரின் மகன்

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

சிங்கள, முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக செயற்பட்டால் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகளைத் தோற்கடிக்க முடியும் என்று பிரதமரின் புதல்வரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளருமான அனுராத ஜயரட்ண குறிப்பிட்டார்.

கெலிஓயா கலுகமுவையில் நேற்று 11.08.2013 மாலை  நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம்கள் பௌத்த கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகளையிட்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாம் புரிந்துணர்வுடன் செயற்பட்டால் கடும் போக்குவாதிகள் தோல்வியுறுவர். இக்கடும் போக்குவாதிகளிடம் அடிக்கடி ஏச்சு வாங்குபவர் எனது தந்தையும் பிரதமருமான டி.எம். ஜயரட்ண ஆவார் என்றார்.   

பௌத்த கடும் போக்குவாதிகளை தோற்கடிக்க முஸ்லிம்கள் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவை வழங்க வேண்டும்.

8 comments:

  1. Wow! Nice speech has given by son of prime min. To make people fool.

    ReplyDelete
  2. Still Alive, just a waste of another public fund.

    ReplyDelete
  3. இழகின இரும்பைக் கண்டால் கொல்லன் தூக்கித் தூக்கி அடிப்பானாம். நீங்களும் நல்லா அடிங்கோ இந்த முசிலிம் ஒட்டுண்ணிகள் உங்கட அரசுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை.

    ReplyDelete
  4. டேய் பய்யா........ நீ சின்ன புள்ளடா...
    இனவாதிகளை உருவாக்குவதே அரசுதாண்டா.......

    ReplyDelete
  5. அட இஞ்சப்பாருடா, தம்பி நீங்க சொல்றத நம்பி ஓட்டுப் போடக்கூட எங்க சமூகத்தில் ஆட்கள் உண்டு அந்த அளவுக்கு எமது சமூகம் பிளவு பட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  6. My personal view i am not promoting any one. I know him personally more than 15 years very good boy. I never seen any politician got such a 3kids. Down to earth. I was very close with them.thats all i can say., gampola people knows.

    ReplyDelete
  7. Ballage goo Balu goo..... His father is one of the pioneers of racism... We haven't forgotten his cunning approach during Dambulla mosque issue....we are not ready to get deceived again... We will get united to chase u all rascals!!!,

    ReplyDelete

Powered by Blogger.