Header Ads



கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு தோல்வி..!

மேற்சொன்ன இந்த தலைப்பில் இந்த செய்தியை எழுதுவதில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உடன்பாடு இல்லை. இருந்தபோதும் உண்மையான களநிலவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் அறிக்கையிட வேண்டுமென்தற்காக இந்த தலைப்பிலேயே இந்த செய்தியை பதிவிட விரும்புகிறோம்.

பௌத்தசாசன அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 11 ஆம் திகதி அமைச்சர்கள் பௌஸி, தினேஸ் குணவர்த்தனா ஆகியோரின் இணைத்தலைமையில் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. அமைச்சர் பௌஸி, இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

கிரண்ட்பாஸ் புதிய பள்ளிவாசலிலேயே முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகையில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதற்கு அங்கிருந்த பௌத்த இனவாத அமைச்சர்கள் (சம்பிக் ரணவக்க) பௌத்த தேரர்கள், சிங்கள பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்போது புதிய பள்ளிவாசலை முற்றாக தகர்த்துவிட்டு, அருகாமையில் விசாலமாக மற்றுமொரு பள்ளிவாசலை கட்டுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எனினும் இதற்கு பல தரப்புகளும் உடன்படவில்லை.


இவ்வாறு பல யோசனைகள், சிபார்சுகள் என இந்த பேச்சுவார்த்தை இழுபறியில் சென்றுள்ளது. ஜனாதிபதிஜ மஹிந்த ராஜபக்ஸவும் இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டு, முடிவு எட்டப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தமையால் எப்படியேனும் தீர்மானங்களை மேற்கொள்ள அவசரம் காட்டப்பட்டுள்ளது.


புதிய பள்ளிவாசலிலேயே தொழுகை நடைபெற வேண்டுமென முஸ்லிம்கள் அடம்பிடிக்க, மறுபக்கம் ஒட்டுமொத்த பௌத்தசிங்களவர்களும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். வேறு வழியின்றி முஸ்லிம்கள் அதற்கு உடன்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம்கள் எவருக்கும் இதில் முழுமையான சம்மதம் இருக்கவில்லை. சில முஸ்லிம் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆத்திரப்பட்டுள்ளனர். தமது முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர்கள் உணர்ந்துள்ளனர். இப்பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைந்தது அல்லது முஸ்லிம்களின் விருப்பங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற நிலையை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரின் கையடக்க தொலைபேசிகள் ஓப் செய்யப்பட்டிருந்தன.

மூத்த முஸ்லிம் பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில், கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு தோல்விதான். பழைய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள அரச மரத்தை வெட்டி முடிப்பதற்கு இடையில் புதிய பள்ளிவாசலில் தொழுவதற்காவது அனுமதியுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டபோது தமது ஆசை அடியோடு நிராகரிக்கப்பட்டதாக அவர் கவலையுடன் தெரிவித்தார்...!

இந்தநிலையில் கிரண்ட்பாஸ் பழைய பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடவும், புதிய பள்ளிவாசலை அப்படியே கைவிடவும் பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20 comments:

  1. ஏன் நமது அரசியல் வாதிகள் இதற்கு ஒத்துக் கொண்டார்கள்..?? புரியவில்லையே...!!! இந்த கூட்டத்தை பகிஷ்கரிப்பதன் மூலம் மேலும் ஒரு அழுத்தத்தை கொடுத்ருக்கலாமே...

    ஒத்துக் கொண்டதன் மூலம் இந்த மா பெரும் அநியாயத்துக்கும் சட்டம் ஒழுங்கு மீறலுக்கும் எதிராக இந்த அரசாங்கத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வர இருந்த மா பெரும் அபகீர்த்தியையும் அழுத்தத்தையும் களைவதற்கு இவர்கள் துணை போய் உள்ளார்கள்.

    மிகவும் அரசியல் சானாகியமற்ற, ராஜதந்திரமற்ற, தொலைநோக்கற்ற, கோழைத்தனமான இந்த முடிவுக்கு இதில் பங்கேற்றவர்கள் நிட்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

    இவர்கள் முஸ்லிம்களின் ஒட்டு மொத்த மத உரிமையை விற்று விட்டார்கள்.

    பேரினவாத சக்திகளின் கரத்தையும், பேரினவாதிகளுக்கு துணைபோகும் இந்த அரசாங்கத்தின் ( ராஜபக்ச அன் கோ ) கரத்தையும் பலப்படுத்தி உள்ளார்கள்.

    யா அல்லாஹ் முஸ்லிம்களின் மத உரிமையையும் தன்மானத்தையும் காப்பாற்றுவாயாக... ஆமீன்

    ReplyDelete
  2. முஸ்லிம் அமைச்சர்களே ஏன் இந்த சொஹுசு வாழ்கை உங்களுக்கு ????

    ReplyDelete
  3. இது நூற்றுக்கு நூறு வீதம் திட்டமிட்டு செய்யப்படுகின்ற சதி இதில் நாம் என்ன முயற்சித்தாலும் தோல்விதான் (ஆனால் அல்லாஹ் தோற்பதில்லை). இந்த பௌத்த இனவாத அரசியல்வாதிகள் இங்கு மஸ்ஜித் ஒன்று இருக்கக்கூடாது என்று திட்டம் தீட்டி விட்டார்கள் அதை நடத்தி முடிப்பதற்க்கு சகல ஒத்துழைப்பும் ஆசிர்வாதமும் அனைத்து தரப்பிலிருந்தும் தாராலமாக கிடைக்கும். என்னதான் அரச தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தும் எவ்வளவு முயற்சித்தும் பயனின்றி போனதற்கு காரணம் என்ன?.
    எது எப்படியோ முஸ்லிம்களாகிய நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் . அல்லாஹ்வை மட்டும் தொழும் இடம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது இதில் எந்த இயக்கத்திற்கோ தனிமனிதனுக்கோ உரிமையில்லை இதனை பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் உம்மாவுடைய பொறுப்பு இயக்க வேறுபாட்டுக்கு துளியளவும் இங்கு இடமில்லை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முஸ்லிம் உம்மாதான் பாதுகாக்க வேண்டும். தயவு செய்து இயக்க வேறுபாடுகளை தவிர்த்து அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநாட்ட துடிக்கும் ஒவ்வெறுவறுக்கும் ஒத்துழைப்பு வழங்குங்கள் இது நம் எல்லோறுடைய கடமையும் கூட களத்தில் இல்லாவிட்டாலும் அல்லாவுடைய மார்க்கத்தை பாதுகாக்க அதிகம் பிரார்த்தியுங்கள். தயவு செய்து தான் சார்ந்த இயக்கத்தை அடிப்படையாக வைத்து பதிவுகளுக்கு கோமன்ட்ஸ் (Comment) அடிக்காதீா்கள்.

    ReplyDelete
  4. Dear Muslim Brothers still you want to stick with the Government.Allahu Subahanavathaala watching from the above.

    ReplyDelete
  5. இப்படியே எல்லாவற்றையும் விட்டு கொடுத்து விட்டு இலங்கையை விட்டு முஸ்லிம்கள் போய் விட வேண்டியதுதான்,,எந்த ஒரு அரசியல் வாதியாவது ,முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு வீட்டு வாசலுக்கு வரட்டும் செருப்பால அடிப்போம்..

    ReplyDelete
  6. முஸ்லிம் அமைச்சர்களே ஏன் இந்த சொஹுசு வாழ்கை உங்களுக்கு ????

    ReplyDelete
  7. முஸ்லிம் மக்களே இப்போதாவது தூக்கதிளிருந்து விளிதேளுங்கள்

    ஜிஹாத் என்பதை ஏன் இஸ்லாம் உங்களுக்கு சொல்லிருக்கிறது அரசியலில் உள்ள எமது அருமை முஸ்லிம் சகோதரர்களே ஜனாதிபதியுடன் இன்னமும் எதற்கு பேச்சு உங்கள் அடியாட்களை எலேக்சன் டைம் ல யூஸ் பண்ணுறமாதிரி இப்போ இஸ்லாத்திட்காக அனுப்புங்கள் எமது பள்ளி வாசல்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்

    முஸ்லிம் சகோதரர்களே உங்களுக்குள் இன்னமும் பிளவு இருந்தால் எமது முஸ்லிம் சமூகம் மொத்தமாக அழியவேண்டி இருக்கும் எனவே உங்களது முரண்பாடுகளை ஒருபுறம் தள்ளி விட்டு எமது மார்கத்தையும் எமது பள்ளிவயல்கலயும் பாதுகாருங்கள் அரசை நம்பி அல்லது யாரை நம்பியும் எந்த பலனும் இல்லை நாமே நேரடியாக களத்தில் இறங்குவோம்
    இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் நபியவர்கள் சொன்னார்கள் ஒற்றுமையல் தன வெற்றி இருக்கிரது என்று நீங்களும் எமது இஸ்லாத்திற்காக ஓன்று படுங்கள்

    எல்லோருமே ஒரே கலிமாவை சொல்லிருக்கிறோம் எல்லோருமே இஸ்லாமியர்கள

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  8. IPPALLIWASALAI KAPPATTUKINTA MUYATCHIYIL ANAITTU MUSLIMKALUM TAMATU KOLKAI SINDANAI WERUPAADUKALAI MARANTU..ONTU PATTU ULAITTANAR.AANAAL MOOCHCHUKKUN MUNNOORUTARAM SLTJ MATTUMTAN ITATKAKA SEYALPATTA MATIRI ARIKKAI WIDUWATILUM KATTIP PESUWATILUM KAALATTAI OOTTI WARUWATAI PAARKKUM POTU ARUWARUPPAKA IRUKKIRATU.TAMATU KOLKAI KADAYYAY WIRIPPATATKU IWARKALUKKU WERU SANTARPAME KIDAIKKAWILLAYA?

    ReplyDelete
  9. Allah Akbar
    You are absolutely correct everything going on according to the well planed agenda
    We keep in prayers

    ReplyDelete
  10. சூல்ச்சிகாரர்க்கெல்லாம் மேலான சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்.உலஹத்தை படைத்து பரிபாளித்துக்கொண்டு இருக்கும் இறைவன் இந்த கொடுமைகளையும் பார்த்துகொண்டுதான் இருக்கிறான்.நிச்சயம் அவனது உதவி நமக்குண்டு பொறுமையோடு இருப்போம்,முஸ்லிமாகிய நமக்குள் பிளவுகளை களைந்துவிட்டு முஸ்லிம் என்ற கொடியின் கீழ் ஒன்றுபடுவோம் நாம் ஒன்றுபட்டால் அல்லாஹ்வின் உதவி சமீபத்தில்தான் இருக்கிறது

    ReplyDelete
  11. இது ஆரம்பம் மட்டுமே. இனியும் இது தொடரும். தொடர்ந்து கொண்டே போகும். பல பள்ளிவாசல்கள் மூடவேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் பாதுகாட்கணும்.

    உலமா சபையும் அரசுடன் இருக்கும் அமைச்சர்களும் பயந்து இருக்குறார்கள். கேட்டால் பொறுமை என்பார்கள். பொறுமை என்ற பெயரில் விட்டுக்கொடுத்துக்கொண்டே போறார்கள். எல்லாவற்றுக்கும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை பற்றி சொல்வார்கள். ஒருநாளும் தியாகம் இல்லாமல் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்றா எதிர்பார்கிறார்கள்?

    போராடும் கூட்டத்துக்கும் வேண்டாம் என்று சொல்லி இருக்குறார்கள். இது எங்கட பள்ளி, நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க என்று சொன்னதாக சில தகவல். நம்ம சமூகம் எப்பதான் உருப்படியகுமோ? அல்லாஹ் போதுமானவன். துஆ கேளுங்கள். நமக்கு புத்திகூர்மையான தலைவர்களும் இஹ்லாசான உலமாக்களும் சமூகத்தில் அக்கறையுள்ள அரசியல்வாதிகளும் தேவை. நம்மளை பார்த்து பயப்படக்கூடிய வகையில் பேரினவாதத்தை அல்லாஹ் ஆட்கனும் என்று துஆ கேளுங்கள். இனிமேலும் இந்த உலமாக்கையோ அல்லது அரசியல்வாதிகளையோ நம்பி பிரயோசனம் இல்லவேயில்லை. அல்லாஹ் நம்ம சமூகத்தை எப்போதும் தலைநிமிர்ந்து நடக்கும்படி ஆட்கி வைப்பானாக!

    ReplyDelete
  12. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  13. If the Govt. has no strength to protect the places of worship of mulims, Muslim politicians must request the government a separate ministry ( Ministry of Muslim affairs) to protect muslims and their religious places like the buddhists have or else they must provide justiful,acceptable and satisfactory solutions for the victimized people.Because muslims also have the equal right according to the constitution(article 10,14(1)(e)) of this country.

    ReplyDelete
  14. Where is faiz mustafa and other MFs?

    ReplyDelete
  15. அப்போ கரம் கொடுங்கள் கட்டியெழுப்புவோம் எனும் கோஷம் இவ்வியினயத்தில் தெர்தலுக்காக பெனர் பெனர் போடப்பட்டுள்ளதே. அது எதற்கோ.

    முஸ்லிம்களின் உரிமைக்காக.... உனது வெற்றி முழு முஸ்லிம் சமூகத்தின் வெற்றி என்றும் பெனர் போடப்பட்டுள்ளது.

    முன்னுள்ளவர்களால் என்ன, ஜனாதிபதியினாலேயே கொடுக்க முடியாத உரிமையை இவர்கள் வெற்றி பெற்ரு கிழிக்கப் போகிறார்கள்???

    எல்லா கோஷங்களும் தங்களது பொக்கட்களை நிரப்புவதற்காகத்தான்.

    ஆளும் கட்சியுடன் சேர்ந்தால் கொஞ்சம் கூடக் கிடைக்கும்.
    அது மட்டுமின்றி, ஏதாவது ஒன்று வரும் போது அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வசிக்கச் சென்றுவிடலாம்.

    ஆனால் அம்புட்டது பொதுமக்களாகிய நாங்கள்தான்.
    வோட்டையும் கொடுத்து மானமு இழந்து நிற்க வேண்டிய நிலை.

    ஆனால், அல்லாஹ் கைவிடமாட்டான்.
    யா அல்லாஹ் உன்னை வணங்கும் கூட்டத்தியும், உனது இல்லத்தையும் நீயே பாதுகாப்பாயாக!!
    இஸ்லத்தை எதிர்ப்பதற்கு தலைமை தாங்குபவர்களில் ஒரு சிலருக்காவது உனது வழியைக் காட்டுவாயாக. இலங்கையில் உனது மார்கம் கால் ஊன்ற உதவிசெய்வாயாக.
    நீயே நேர்வழி காட்டுபவன்.

    ReplyDelete
  16. So, they were not discussing about the mobs who vandalised the mosque. this is a clear acceptance that it was a planned attack by whoever participated from the government side. govenment shows that they are not going to come to a solution. muslim politicians please resign your posts for the sake of Allah (I think you all already well settled financially)

    ReplyDelete
  17. ALLAHWUKAHA ULAMA SABEIKKO ALLAZU ENEYYA MUSLIM SAHOZARARHALUKKO ESI PAWAM SUMAKKA WENDAM ESUM NEENGALUM MUSLIM SAMUHATHIN ANGATTAWARZAN UNGALAL ENNA PANNA MUDINTAZU,THATPOZU NAM ARASIYALUM SARI ENEYYAWARHALUM SARI PALAMANA NELEYYIL IEELEI,APPADI UNMAYANA ORU MANIZAR THONRINALUM NAM ENEYYA ARASIYAL ARIVALIHAL AWARHALAZU PEYAR POI WIDUM ENRU WALARPAWARHALEI KILLI ERIYA EZUM SEIWARHAL,SAMAYA REEZIYILUM AWWARUZAN MUZALIL NAAM NETTIL IRUNTUKONDU MATRAWAREI SAPIPPAZEI WITTU DUA SEYYAWUM ADUTU NAMMAL SAMUHAM INNUM SIZARIPPOHAMAL NALLA COMMENTS ADITTU THULIYENUM SAKTHI KODUKKAWUM,ALLAHWUKAHA PIRIYUM COMMENTS ADIKKA WENDAM.NAAM YARUM EZIRPARKUM ALAWU NAM ARASIYALWAZIHALO,SAMUHA SAMAYA THALEIWARHALO DEMAND PANNUM ALAWU WALARAWUM ILLEI SO NAAM AZIHAM EZIRPARKA MUDIYAZU,AHIMSEI SEIVOM AZE NERATHIL AYATTAMAWOM

    ReplyDelete
  18. பொளத்த இனவாதிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனை வெற்றி கொள்ள வழிகாட்டக் கூடிய தலைமைத்துவமாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அரசியல்வாதிகள் முதல் ஜம்இயத்துல் உலமா வரை மௌனிகளாக ஆகிவிட்டார்கள். மக்கள் அநாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது குனுர்த்தையாவது ஓதுவோம் என்றால் அதற்கும் தடை வருகிறது. கேட்டால் தலைமத்துவத்திற்கு கட்டுப்படுங்கள் என பதில் வருகிறது. மறுபக்கம் இவை எதுவுமே நடைபெறாதது போன்று எதிர்கால அரசியல் கனவுகளுடன் மாகாண சபை தேர்தலிலே மகிந்தவுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி முஸ்லிம்கள்.களத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், எதிகால அரசியல்வாதிகளுக்கும் தமது இலட்சியத்தில் உறுதியுடனேயே இருக்கிறார்கள். நாம் என்ன செய்வது ? அல்லாஹ் சொல்கிறான் தொழுகையை கொண்டும் பொறுமையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று. அல்லாஹ்வின் துர்தர் அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்தி வைப்பதற்கு கூட அதற்குரிய சூழல் அமையும் வரை பொருமையைத்தான் கடைப்பிடித்தார்கள். ஈமான் கொண்டவர்கள் கடுமையாக கொடுமை செய்யப்பட்ட போதும் அவர்கள் பொருமையைத்தான் கடைப்பிடித்தார்கள். இலங்கையை பொறுத்த வரைக்கும் நாமும் அவ்வாறான ஒரு சூழலில் தான் இருந்து கொண்டிருக்கின்றோம். நாம் குனுர்த் ஓதாவிட்டாலும் எம் கரங்களை ஏந்துவோம். தொழுகையில் சுஜூதிலே பிரார்த்திப்போம். மனதால் எந் நேரமும் பிரார்த்திப்போம். அல்லாஹ் நிச்சயம் வெற்றியை தருவான். அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  19. 3606. ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்.
    மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள்

    ReplyDelete

Powered by Blogger.