Header Ads



ஒரே ஒரு இலங்கையர் என்ற உணர்வுதான் எமக்கு இருக்க வேண்டும் - அமைச்சர் வாசுதேவ

(ஏ.ஜே.எம்.சாலி)

அரச சேவையில் பணிபுரிபவர்கள் இரு மொழிகளையும் ஏற்றுக் கொண்டு இலங்கையில் வேண்டிய இடத்திற்கு சென்று வேண்டிய மொழிகளில் பணிபுரிவதற்கு எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு இலங்கையர் என்ற உணர்வுதான் எமக்கு இருக்க வேண்டும் வேறு எந்த முரண்பாடும்   இருக்க வேண்டியதில்லை இவ்வாறு செயற்பட்டால் நாட்டில் இனப்பாகுபாடு கிடையாது என கூறினார் தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

திருகோணமலை அரச திணைக்களங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான தேசிய மொழிக் கொள்கையை செயற்படுத்துதல் தொடர்பான விசாரணைப் பட்டறை ஒன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடந்த  செவ்வாய்கிழமை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்விற்கு சமூகமளித்த  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பட்டு அமைச்சர் வாசு தேவ  நாணயக்கார மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

 மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ. ரஞ்சித் டி சில்வா மற்றும் திணைக்களகங்களான மாவட்ட காணி ஆணையாளர் செயலகம், கமநல சேவைத் திணைக்களம்,வனபரிபாலனசபை, துறைமுக அதிகாரசபை, கல்வித் திணைக்களம்,அஞ்சல் திணைக்களம், இலங்கை போக்குவரத்து திணைக்களம். நீர்  வழங்கல் வடிகால் அதிகாரசபை, கூட்டுறவு திணைக்களம், மின்சாரசபை, திருகோணமலை பிரதேசசபை ஆகிய திணைக்களகங்களின் அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து கலந்து கொண்ட திணைக்கள அதிகாரிகளிடம் இரு மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதிலுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றினை செயற்படுத்தாத திணைக்களங்களுக்கு தமது அமைச்சினால் இரு மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு அமைச்சினால் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.