Header Ads



இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் துயர் துடைக்குமா வடமேல் மாகாண சபைத் தேர்தல்..?

(எம்.முஹம்மத்)

இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் வருகின்ற வடமாகாண சபைத் தேர்தலைவிட வடமேல் மாகாண சபைத்  தேர்தல் தான் முக்கியத்துவம் உடையதாக காணப்படுகின்றது.  யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 12000 ஆக இருக்கின்றது. மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 35000 வாக்காளர்களாக உள்ளது. இந்த எண்ணிக்கை வடமேல் மாகாண சபையில் ஆகக் குறைந்தது இரண்டு பிரதிநிதிகளைப் பெற போதுமானதாக உள்ளது. புத்தளம் வாக்காளர்களுடன் சேர்த்து கணக்கிட்டால் இம்முறை ஆகக்குறைந்தது ஐந்து பிரதிநிதிகளை வடமேல் மாகாணசபைக்கு அனுப்ப முடியும்.

ஆனால் பெரும்பாண்மை கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் பங்கு பற்றினால் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களையே பெற முடியும். இது வாக்குகளை வீணடிக்கும் முயற்சியாகும். புத்தளத்தைப் பொருத்த வரையில் முஸ்லிம்கள் தனியாக கேட்பதிலேயே அதிகளவு இலாபங்கள் உள்ளன. 

அதே வேளை யாழ்ப்பாண முஸ்லிம்கள் இத்தேர்தலில் எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். யாழ்ப்பாண முஸ்லிம்கள் பெருமபாலாக வாழும் மன்னார் வீதி ஒற்றைப்பனையடி முகாம், சோல்டன் முகாம் மற்றும் தில்லையடியிலுள்ள தென்னந்தோப்பு முகாம், பரீத்தா பாத், சதாமியாபுரம், ரத்மல்யாய, சாபி நகர், அரபாநகர், அல் ஜித்தா, வை.எம்.எம்.ஏ. போன்ற பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் கடந்த 23 ஆண்டுகளாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் புரந்தள்ளப்பட்டு வாழ்கின்றனர். இவர்கள் தட்டிக்கழிக்கப்பட்ட இந்த நிலமை இந்த தேர்தலில் பிரதிபளிக்கும் என நம்பப்படுகிறது.

ஏனெனில் இந்த முகாம்களில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறாயிரம் குடும்பங்களில் 90 சதவிகிதமானவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களோ வேறு உதவிகளோ வழங்கப்படவில்லை. அத்துடன் இவர்கள் வாழும் முகாம்களின் வீதிகள் கிரசர் போடப்பட்டவையாக குன்றும் குழியுமாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இனிமேலும் வாக்குறுதிகளை நம்பி சலுகைகளுக்காக உரிமைகளை இழக்கும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள்.  

வடமாகாணத்திலுள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். ஆனாலும் இம்முஸ்லிம்களின் பொதுவான ஒரு பிரச்சினைகளாக இம்முஸ்லிம்களின் வீடுகள் சொத்துக்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளமை, அந்த இழப்புகளுக்கான நஷ்டஈடுகள் கிடைக்காமை, புனர்வாழ்வுக்கான உதவிகள் கிடைக்கப் பெறாமை, வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற காரணங்கள் உள்ளன. 

இத்தேர்தலில் போட்டிக்கு இறங்கியுள்ள சிறுபான்மைக் கட்சிகளில் எந்தக் கட்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளில் ஒரு சிலவற்றையேனும் தேர்தலுக்கு முன்பு தீர்க்கின்றதோ அக்கட்சிக்கே முஸ்லிம்கள் வாக்களிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. 

3 comments:

  1. வடமாகாண முஸ்லிம்களின் மேற்குறிப்பிட்ட தேவைகள் எதிர்பார்ப்புக்களோடு, தமிழ் மக்களின் தேவைகளும், எதிர்பார்பபுக்களும் நிறையவே உள்ளதையும் மறுதலித்து விட முடியாது.

    இதற்கெல்லாம் காரணம், யுத்தம் முடிவடைந்த நான்காண்டுகளிலும் அரச தரப்பிலிருந்த ஆளுங்கட்சியின் அல்லது ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் உரிய முறையில் அக்கறை செலுத்தாமையே!

    இக்கால கட்டத்தில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற அரசியலில் எதிரணியில் இருந்ததால் அவர்களாலும் எதையேனும் செய்ய முடியவில்லை.

    செப்டம்பர் 21ம் திகதி வட மாகாண சபைக்கான வாக்களிப்பு முடிவுற்ற பின் அம்மாகாணத்தின் ஆட்சியை த.தே.கூட்டமைப்பு கைப்பற்றுமாயின், அக்கட்சியின் ஆளுகைக்குட்பட்ட தமிழ் - முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் மீள் குடியேற்றம், இருப்பு, பாதுகாப்பு, கல்வி, கலை, கலாசாரம், வாழ்வாதாரம் போன்ற பல்வேறு துறைகளிலும் உரிய கவனம் செலுத்தும் கடப்பாடுடையதாகிவிடும்.

    அதன் பின்னரும் அவர்களால் அம்மாகாணத்தினுள் வாழும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் - சிங்கள மக்களின் மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகளில் பாரபட்சமோ, புறக்கணிப்போ மேற்கொள்ள முடியாது.

    எனவே மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் த.தே.கூட்டமைப்புடன் வடபுல முஸ்லிம் சமூகம் நம்பிக்கையுடன் ஒன்றிணைய வேண்டும்.

    வட மகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றி அம்மாகாண அரசாங்கத்தை நிறுவும்போது அவர்களின் அமைச்சரவையில ஒருவராவது சிறுபான்மை இனத்தவரும் உள்வாங்கப்பட்டாலே சர்வதேச சமூகமும் அவர்களது தேசிய சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் விடயங்களில் கவனம் செலுத்தும்.

    மாறாக, அமைச்சரவை முழுவதையும் அவர்களே ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சி செய்வது வடபுலத்தில் ஜனநாயகம் முழுமையாகப் பின்பற்றப்படுவதைக் கேள்விக்குறியாக்கும்.

    இந்த வகையில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலுள்ள அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி அவர்கள் மாத்திரமே வட மாகாண சபையை த.தே..கூட்டமைப்பு கைப்பற்றும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலான ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார் என்பதை வடபுல முஸ்லிம் வாக்காளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

    த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானதும் கட்டுரையாளரின் பல சந்தேகங்களுக்கு தெளிவுகள் ஏற்படும் என நம்புகின்றேன்.

    அது வரையில் அரசாங்கத் தரப்பின் கொடுப்பனவுகளுக்கும், தேர்தல் கால வாக்குறுதிகளுக்கும் வடபுல முஸ்லிம் சமூகம் பலியாகாதிருக்க வேண்டும்

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. முஸ்லீம்களே அரசாங்கத்துக்கோ அல்லது பொது பல சேனா அரசின் பங்காளிகலான றிஷாத் மற்றும் வெட்கம்கெட்ட ஹகீம் ஆகியோருக்கு வாக்களித்தால் அது கண்ணாடி வீட்டில் இருந்தது கொண்டு கல் எறிவதற்கு சமம் இஸ்லாமிய விரோத பொது பல சேன அரசாங்கத்துக்கு வாக்களித்தால் அது முஸ்லிம் சமுகத்துக் செய்யம் துரோகம் என்பதை மறந்து விடாதீர்கள் அல்லாஹ்வுக்கும் பதில் சொல்ல வேண்டும் ஹகீமோ றிஷாதோ வென்றால் உங்கள் வாக்குகளை பொது பல அரசிற்கு விற்று விடுவார்கள் இவர்கள் வென்றால் தேர்தலின் பின் முஸ்லிமகளின் ஒட்டு மொத்த மார்க்க உரிமையும் பறிக்கப்படும்
    சகோதரர் புவி றஹ்மதுழ்ழாஹ் நல்ல பல கருத்துக்களை வெளியிடுவதற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  3. நன்றி மறப்பது நன்றன்று ,அரசாங்கம் இன்று எமக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தாலும் புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்களுக்கு மகத்தான சேவை செய்துள்ளது
    1. சொல்டன்முகாம் 40 வீடுகள்
    2.சதாமியபுரம் 100+ வீடுகள்
    3.தில்லையடி-எப் 30 வீடுகள்
    4..தில்லையடி-ஈ 20 வீடுகள்
    5.உமராபாத் 60+ வீடுகள்
    6.தென்னைமர முகம் 30+ வீடுகள்
    7.வை எம் எம் எ முகாம் 20+ வீடுகள்
    8.பரீதாபாத் 48 வீடுகள்
    9. செம்பமாடு 28 வீடுகள்
    10.மல்லிகாபுரம் 40+ வீடுகள்
    இந்த வீடுகளின் எண்ணிக்கை அண்ணளவானது
    இவ்வீடுகள் கிடைப்பதற்கு அமைச்சர் ரிசாதின் பங்களிப்பு மிகமுக்கியமானது அவரின் நல்லவைகளை நாம் பாராட்டியாகவேண்டும் இன்று உள்ள நிலைமையில் நாம் மற்றவர்களை குறைகூறாமல் எம்சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் சகவாழ்வுக்குமாக இறைவனிடத்தில் இறைந்சுவதைவிட வேறு வலி இல்லை உண்மைகள் என்றும் அழிவதில்லை

    ReplyDelete

Powered by Blogger.