முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிநெறி
(அப்துல் அஸீஸ்)
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்பட்ட பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிநெறியும், முன்னேற்ற மீளாய்வு நிகழ்வும் நேற்று கல்முனை கிறிஸ்டா இல்லம் மண்டபத்தில் இடம்பெற்றது.
பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 1325ஆவது பிரேரனையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான இச்செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த துறைசார் பயிற்றுவிப்பாளர்கள் 25பேர்களுக்கு போகஸ் எனும் சர்வதேச அரசசார்பற்ற அமைப்பின் அனுசரணையுடன் இப் பயிற்சிநெறி நடாத்தப்பட்டது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தணைலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக ஆய்வாளரும், ஊடகவியலாளரும் ஆகிய அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் கலந்துகொண்டார்.
Post a Comment