Header Ads



வடமாகாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - சீன அதிகாரிகளுடன் ஜனாதிபதி மஹிந்த பேச்சு

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவது தொடர்பாக, சீன அரசு நிறுவனத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றுள்ள சீன மேர்ச்சர்ன்ட் குழும நிறுவனத்தின் தலைவர் லீ ஜியாங்கொங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர். 

இதன்போது, வடக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி குறித்து சுட்டிக்காட்டிய சிறிலங்கா அதிபர், வடக்கு-தெற்கு மக்கள் விரைவாகப் பயணம் மேற்கொள்வதற்கு, அதிவேக நெடுஞ்சாலை அவசியம் என்று தெரிவித்துள்ளார். எனவு இந்தத் திட்டத்தை விரைவாக செயற்படுத்துமாறும் அவர் சீன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப, நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான சாத்திய ஆய்வை சீனாவின் மேர்ச்சன்ட் குறூப் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனமே, கடந்த திங்கட்கிழமை, திறந்து வைக்கப்பட்ட கொழும்பு தெற்கு கொள்கலன் முனையத்தை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. Not only this for North, when the election still coming closer there will be much more in store to come as surprises for all. How many election promisses are blowing in the wind? When will they learn? Will they ever learn?

    ReplyDelete
  2. அதி வேக நெடுஞ்சாலை வட பகுதியின் புதிய குடியேற்ற திட்டங்களை நோக்காக கொண்டு அமைக்கபடினும் ஆச்சரியமில்லை ...பெருன்பான்மை இனத்தவருக்கு சாதகமாகவே அமையும் என்பதில் ஐயம் வேண்டியதில்லை.....

    ReplyDelete
  3. All developments in the North Province now not for Tamils and Muslims but targeted only for Sinhalease people in future..

    ReplyDelete

Powered by Blogger.