நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்ப்பபை புற்றுநோயை கண்டறிய முடியும் - விஞ்ஞானிகள்
புற்றுநோய் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்ப்பபை புற்றுநோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர்லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகியோர் அடங்கிய குழு சாக்கோலேட், லாம்பிராடர் இன நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
கர்ப்பபை புற்றுநோயை உருவாக்கும் செல்கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. பின்னர் கர்ப்பபை புற்றுநோய் சோதனைக்கு வந்த பெண்களுக்கு ரசாயன மருந்து கொடுத்து அதன் மூலம் வெளியேறும் சிறுநீரில் கர்ப்பபை புற்றுநோயை உருவாக்கும் செல்கள் இருக்கின்றனவா என மோப்பம் பிடிக்க செய்தனர்.
அவ்வாறு மோப்பம் பிடித்து உறுதி செய்த பெண்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்ப்பபை புற்றுநோயை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
Post a Comment