Header Ads



முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் செப்டெம்பர் முதலாம் திகதி அமுல்

இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவினால் கடந்த ஜுலை 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிட்டப்பட்டுள்ள, முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் வரும் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய ஒழுங்கு விதிகளின்படி,  சகல முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றர் பொருத்தப்படல் வேண்டும்,

கட்டண விபரத்தை வண்டியின் வெளிப்புறத்தில் காட்சிப்படுத்தல் வேண்டும், வண்டியின் வலது புறத்தில் கதவு பொருத்தப்படல் வேண்டும், முச்சக்கர வண்டியின் வேகம் ஒருபோதும் மணிக்கு 40 கிலோ மீற்றருக்கு மேல் போகக்கூடாது, மூன்று பயணிகளுக்கு மேல் முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாது.  ஆயினும் ஒரு வளர்ந்தவருக்கு பதிலாக 12 வயதிற்கு குறைந்த இரண்டு பேரை ஏற்றிச் செல்லலாம். சாரதியின் இருக்கையின் பின்புறத்தில் சாரதியின் புகைப்படம், சாரதியின் அனுமதி பத்திரத்தின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் இலக்கம், அவசர தொடர்புக்கான தொலைபேசி இலக்கம் எனும் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கு விதிகளை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Masha Allah........ This idea is very wonder full. Ali baba sethanda.............

    ReplyDelete

Powered by Blogger.