Header Ads



ஓலுவில் துறைமுகம் - முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு - மீண்டும் அழைப்பிதழ் அச்சடிப்பு

(யு.எல்.எம். றியாஸ்  + ஏ.பி.எம்  அஸ்ஹர்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாளை  (01.09.2013 )  திறந்து வைக்கப்பட உள்ள ஒலுவில் துறைமுக திறப்பு விழா ஏற்பாடுகள் ஏட்டிக்குப்  போட்டியாக நடைபெற்று  வருகின்றன

துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஒலுவில் துறைமுக திறப்பு விழா  அழைப்பிதழ்கள்  விநியோகம்  கடந்த  சில தினங்களாக விநியோகிக்கப்பட்டு  வருகின்ற  நிலையில் இவ் அழைப்பிதழில் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ச, துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட  அமைச்சர் ரோகித அபேகுணவர்த்தன, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ,எல்,எம், அதாஉல்லாஹ்  ஆகியோர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது

இவ் அழைப்பிதழ்கள் அமைச்சர் ஏ,எல்,எம், அதாஉல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்தது

இதில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயத்தை அரசின் உயர் மட்டத்திற்கும், துறைமுக அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள்  திட்ட அமைச்சர்    ரோகித அபேகுணவர்த்தனவின் கவனத்திற்கும் கொண்டு வந்தது  இதை அடுத்து  மற்றுமொரு வேறு  அழைப்பிதழ்  மீண்டும் அச்சிடப்பட்டு அவ் அழைப்பிதழில்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ச,  நீதி அமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ தலைவருமான றவூப்  ஹகீம், துறைமுக  அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர்  ரோகித அபேகுணவர்த்தன, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ,எல்,எம், அதாஉல்லாஹ், சிரேஸ்டமைச்சர் பி,தயாரட்ன  ஆகியோர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இவ்  அழைப்பிதழ்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன,

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேசிய காங்கிரஸ் மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ  ஆகிய இரு கட்சிகளும் அதன் தலைவர்கள்,மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஏட்டிக்குப் போட்டியாக  ஒலுவிலில் முகாமிட்டு ஏற்பாடுகளை  செய்து  வருவதை  காணமுடிகின்றது..

7 comments:

  1. we can see our peoples attitud .more better if the both persons not attend the function Athaullah & Raufhakeem will be nice no any problems will come very soon eastern muslims will teach them all.

    ReplyDelete
  2. அங்கே இரண்டு அமைச்சர்கள் (?????) ஹஜ் கோட்டாக்களுக்காக ரெஸ்லிங் பாணியில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றார்கள் !!! இங்கே என்னடாவென்றால் ஒலுவில் துறைமுகத்தின் நீச்சல் போட்டியில் நீ முதல்வனா நான் முதல்வனா ? நாளை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தும் போர்வையாளர் நானா அல்லது நீயா எனப் போட்டி போடுகின்றனர் இந்த இரண்டு பொக்ஸிங் அமைச்சர்கள் !! இவங்க தான் நமது சமூகத்தின் உன்னத தலைவர்கள் !!!

    ReplyDelete
  3. ஆமாம் சீக்கிரம் அதைச் செய்யுங்கோ, இல்லாவிட்டால் கூஜா தூக்கும் கூட்டம் கோபித்துக்கொள்ளும், முஸ்லிம்களுடைய மற்றைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்த்துவைக்கப் பட்டுவிட்டது இது மட்டும்தான் பாக்கி.

    ReplyDelete
  4. At this rate, in the future we may even have a seaport in Kandy!!! Don't laugh,Chinese will divert
    sea to other parts of the country."Miracle of Asia" is second to none.Elections are the main
    business of this government.

    ReplyDelete
  5. சரி நீங்க ரெண்டுபேரும் நாயும் கழிச்சட்டியும் போல அடிச்சுக்காம முஸ்லிம்களோட மானத்தையும் நன்மதிப்பையும் குழந்தைப்பிள்ளைத்தனமான வேலைகளால் காற்றில் பறக்கவிடாமல் பாதுக்காத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. நாய் பொழப்பு

    ReplyDelete

Powered by Blogger.