அத்திட்டிய ஹிபா ஜும்ஆ பள்ளிவாசலை மூடவேண்டாம் - பொலிஸார் அறிவுறுத்தல்
தெஹிவளை - அத்திட்டிய மஸ்ஜிதுல் ஹிபா ஜும்ஆ பள்ளிவாசலை மூடிவிட வேண்டாமென பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அப்பிரதேசத்தின் தலைமை பிக்கு ஒருவரால் குறித்த பள்ளிவாசல் மூடப்பட வேண்டுமென நேற்று சனிக்கிழமை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி குறித்த பொலிஸ் நிலையத்தில் பள்ளிவாசால் நிர்வாகத்தினருடன் பொலிஸார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது எக்காரணம் கொண்டும் பள்ளிவாசலை மூடவேண்டாமென பொலிஸார் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தாம் இதுதொடர்பில் குறித்த பிரதேசத்தைச் நேர்ந்த பௌத்த பிக்குவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் பொலிஸார் உறுதியளித்ததாக ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான தெரிவித்தார்.
Don't trust brothers..They will ask us to close after the elections. Wait and see.
ReplyDelete