தீகவாபியில் சர்வமத தலைவர்கள் சங்கமித்த பௌத்தமத விழா
(வி.ரி.சகாதேவராஜா)
இராணுவத்தின் 631வது படையணிப்பிரிவும் கண்டி பௌத்த நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வமத தலைவர்கள் சங்கமிக்கும் பௌத்தமத விழா இன்று சனிக்கிழமை மாலை அம்பாறையைடுத்துள்ள தீகவாபியில் இடம்பெற்றது.
கண்டியிலிருந்து 55 பஸ்களில் 2500 பக்தர்கள் வந்திருந்தனர்.அம்பாறை மாவட்டத்திலிருந்து சர்வமத தலைவர்கள் 1100 பேரளவில் கலந்துகொண்டனர்.
இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஹரேன் பெரேரா 631வது படையணிப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் பியந்த கமகே மற்றும் சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்துகொண்டதோடு படைவீரர்களும் கலந்துகொண்டனர்.வெண்ணிறஉடை தரித்த பௌத்த மக்கள் தீகவாபி வளாகம் பூராக சாது சாது என கோசமிட்டவாறு தரித்திருந்தனர்.
முதலில் நீண்ட ஊர்வலம் இடம்பெற்றது.பின்னர் வளாகத்தில் சமய ஆராதனைகள் இடம்பெற்றன. நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் இனமத ஒற்றுமையுடன் புரிந்துணர்வுடன் சந்தோசமாக நிம்மதியாக வாழ அங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

Post a Comment