Header Ads



புத்தளம் மாவட்ட முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமனம்

புத்தளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக புத்தளத்தை சேர்ந்த கல்விமானும் Colombo Greenwich College கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான எஸ்.எம்.இல்ஹாம் மரிக்கார் நேற்று நடந்த கட்சி உயர் மட்டக்குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களால் நியமிக்கப்பட்டார். 

இவர் வருகின்ற வடமேல் மாகாண சபைத்தேர்தலில் புத்தளம் தொகுதியின் முதன்மை வேட்பாளராகவும் களமிறங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. congratulation mr.ilham D.M.NABHAN THARAPURAM

    ReplyDelete
  2. இருபத்தைந்து வருடங்களாக ஸ்ரீ.ல.மு.கா. இதைத்தான் செய்து வருகின்றது.

    தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இளைஞர் காங்கிரஸ் தலைவர், பிரதேச அமைப்பாளர்கள் தெரிவு, கிளைகள் அங்குரார்ப்பணம் என்ற பம்மாத்துக்கள்தான் தலைவரால் இச்சமூகத்திற்கு காட்டப்பட்டு வருகின்றன.

    தேர்தல் வாக்களிப்பு முடிந்ததும் இந்த அமைப்பாளர்களையும், மத்திய குழுக்களையும், கட்சிக் கிளைகளையும் மக்களால் காண முடிவதில்லை.

    கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது எமதூரில் மீன்பிடி இலாகா வீதியில் ஒரு கிளையும், கடற்கரை வீதி டாக்டர் உமர்தீன் தோட்டத்தில் பிரதேச மத்திய கிளையும் தலைவரால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

    பின்னர் இந்த அலுவலகங்களுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்ததாக ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் வெளியிடப்பட்டு முஸ்லிம்களின் உணர்வுகள் தூண்டப்பட்டன.

    வாக்களிப்பு நடைபெற்று வாக்குகளையும் அரசாங்கத்திற்கு தலைவரும், தவிசாளரும் விற்பனை செய்தபின் கிளைகள் செயலிழந்தன.

    இன்று மீன்பிடி இலாகா வீதி கிளை தனியார் ஒருவரின் ஸ்டோராக உள்ளது. கடற்கரை வீதி மத்திய அலுவலகத்தை மு.கா. வின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் மாஸ்டரே உல்லாச உணவகம் திறந்து வியாபாரம் செய்கின்றார்.

    இப்படி நிலைகள் இருந்தால் எப்படி கட்சி வளரும்? மக்கள் அணி திரள்வார்கள்?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. Really he is great person to develop puttalam and also he is an educationalists. I'm one his student.

    ReplyDelete
  4. நல் வாழ்த்துக்கள்
    இல்மி அஹமட் லெவ்வை
    (காத்தான்குடி ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்)

    ReplyDelete

Powered by Blogger.