முஸ்லிம்கள் வாக்களிக்கச் செல்லாமலிருப்பது எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு சமன்
முஸ்லிம்களில் அனேகர் வாக்களிக்ச் செல்லாமல் இருப்து எமது உரிமைகளை விட்டுக் கொடப்பதற்குச் சசமமாகுமென் கண்டி மாவடட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம். பைஸ்சல் மபாஸ் தெரிவித்தார். (27.8.2013) மடவளையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்மொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் கிராமங்களைப் பொருத்த வரை 50 சதவீதமானவர்கள் வாக்களிக்கச் செல்லவதில்லை. குறிப்பாக பெண்கள் செல்வதில்லை. இது மாபெரும் தவறாகும். ஏனெனில் எமது உரிமைகளை வென்றெடுக்க எமது பிரதி நிதித்துவம் தேவை. பழைய அரசியல் அமைப்புப்படி யாரோ ஒருவர் எமது பிரதேசத்தில் இருந்து தெரிவாகும் முறை இருந்தது. ஆனால் விகிதாசார முறையில் அப்படி அல்ல. நாம் சகலரும் வாக்களித்தத்தான் எமது பிரதி நிதித்தவத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் மடவளை, பிஹில்லதெனிய, குண்ணேகஷபான, மற்றும் நாப்பான, ஊராதெனிய, லீமகஹ தெனிய போன்ற மடவளையை அண்டிய பகுதிகளில் சுமார் 5000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. சகல தேர்தல்களிலும் நாம் அவதானித்தது இதில் சுமார் 2500 பேர் வாக்களிப்தில்லை. இந்த 2500 பேரும் வாக்களித்தாலே கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதி ஒருவர் மடவளையில் இருந்து தெரிவாகப் போதுமான விருப்பு வாக்குகளை அது திருப்தி செய்யப் போதியதாக இருக்கும். எனவே முழுமாவட்டத்திலுமுள்ள சகல முஸ்லிம்களும் வாக்களித்தால் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வாக்ககள் பயன் உள்ள ஒன்றாக மாறிவிடும் என்றார்.
எனவே சகலரும் வாக்களிப்பில் பங்கு கொள்ள வேணடும். குறிப்பாக பெண்கள் வாக்களிக்கச் செல்லாமல் இருக்கக் கூடாது என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.
BUT IF YOU GO FOR VOTING, THEN YOU ACCEPT KUFR LAW OVER SHARIYA AND COMMITING RIDDHA. we do not have shariya as a option at the moment so that we better not to vote in kufr system.
ReplyDeletewhat you have gain from this kufr politician for islam and muslim.