எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..!
நவீன ரக ஆப்பிள் கைபேசி என்று நினைத்து 'ஓன் லைன்' மூலம் ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த இளம் பெண் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் அவுஸ்திரேலிய ஊடகங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என்று 'ஒன் லைன்' மூலம் விளம்பரம் செய்தார். சில நாட்களில் அவரை ஓன் லைன் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு பெண் தன்னிடம் புத்தம் புதிதாக '2 ஆப்பிள்கள்' இருப்பதாகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர்.
விளம்பரம் செய்த பெண்ணிடம் ஆயிரத்து 200 அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.73 ஆயிரம்) பெற்றுக் கொண்டு 2 புதிய கைபேசி பெட்டிகளை அளித்தார்.
மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் பெட்டிகளை திறந்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் 2 ஆப்பிள் பழங்கள் இருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பிரிஸ்பேன் பொலிசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஓன் லைனில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு காவலர் ஜெஸ் ஹாப்கின் என்பவர் எச்சரித்து அப்பெண்ணை அனுப்பியுள்ளார்.
Post a Comment