Header Ads



முஸ்லிம் உம்மத்திற்கு...!

(முபாஸல் மபாஸ்)

அல்லாஹ் தந்த நிஹ்மத்துக்களை நாம் உதாசீனம் செய்வது, மார்க்க கடமைகளில் பொடுபோக்கு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் நாம் கடுமையான சோதனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். தற்கால நிலைமைகள் படுமோசமடைந்து வருவதை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இன்று காதல் எனும் பெயரில் எமது சில பெண்கள் அந்நியவர்களால் இலக்கு வைக்கப்பட, இன்னும் சிலர் எமது பெண்களை கேவலமாக சித்தரிப்பதோடு மட்டுமன்றி, அவர்களுக்கெதிராக வன்முறைகளை பிரயோகிக்க  அந்நிய இளைஞர்கள்  மூலைச்சலவை செய்யப்படுகின்றனர்.

சினிமா மோகத்தினால் சீரழிந்து போயுள்ள எம்மை விட்டு மார்க்கம் தூரவாகிக் கொண்டே போகின்றது, சில கதைகள் வதந்திகள் எனவும், சில வெளியில் சொல்ல வெட்கித்தும் இன்னும் சில எமது இளைஞர்களின் பொறுமைக்காக வேண்டியும் மூடி மறைக்கப்படுகின்றன என்பதே உண்மை.

எமது பெண்மணிகள் சிலர் அந்நியவர்களுடன் காதல் மாயையில் சீரழிகின்றனர் என குரலெழுப்பப்பட்ட போது அக்கருத்துக்களை உதாசீனம் செய்த எமது சமூகம் கல்கமுவ சம்பவத்தில் சற்று சுதாகரித்துக் கொண்டது. எனினும் எத்தனை பெற்றோர், சகோதரர்கள் தமது குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி கரிசனை கொண்டோம் என்பது கேள்விக்குறி.

அண்மையில் ஒரு முஸ்லிம் ஊரில் நடைபெற்ற சம்பவம் மாலை 6.30 மணியளவில் நமது சகோதரி ஒருவர் பாதையோரமாக நடந்து செல்ல மாற்று மத சகோதரர் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு கதைத்துக் கொண்டு செல்கிறார். நோன்பு திறக்கும் நேரம். இதை நமது சமூகம் எவ்வாறு நியாயாம கற்பிக்கும்.

1.அது அந்நிய பெண் தலைக்கு முக்கா போட்டு சென்றிருக்கும்.
2.அந்த ஆண் முஸ்லிமாக இருந்திருப்பார்.
3.வேலைத்தளத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர் துணைப் பாதுகப்புக்கு சென்றிருப்பார்.

இதே மாதிரியான நொண்டிச் சாட்டுகள் காரணங்கள் எமது சமூகத்தினால் பல இடங்களில் முன்வைக்கப்படுவது வழைமை.

வெளி பாடசாலைக்கு பெண்களை அனுப்பி வைப்பது, தனியார் வகுப்புக்களுக்கு தனியாக அனுப்புவது. தயவு செய்து மீண்டும் இவ்விடயங்களை நியாயப்படுத்தாமல் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க முயல்வோம். வீட்டில் உள்ள சினிமா கொட்டைகளை நிறுத்துவோம்.(இங்கு தொலைக்காட்சி அவசியம் என காரணங்கள் கூறாமல் பாவனையை முறைப்படுத்துங்கள், அதே நேரம் பெண்களை மார்க்க விடயங்கள்க்கு காது கொடுக்க ஏற்பாடு செய்து கொடுங்கள்), ஆண் துணையுடன் அனுப்புவோம். எமது பெண்கள் நல்லவர்கள் தான். எனினும் அவர்கள் பலவினமானவர்கள் என படைத்த நாயனே கூறி விட்டான். ஆவர்களை வழிகெடுப்பதற்கான சூழல் அந்நியவர்களால் உருவாக்கப்பட்டு கொண்டு வருகிற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எமது பெண்களை முறையாக வெளியில் அனுப்பினாலும் அவர்கள் மீது அட்டூழியங்கள் புரிய அந்நிய இளைஞர்கள் பல வகைளில் உந்தப்படுகின்றனர்.

நாம் எம்மையும் சமுகத்தையும் பாதுகாக்க முயல்வோம். இன்ஸா அல்லாஹ் படைத்தவன் துணை நிப்பான்.

No comments

Powered by Blogger.