Header Ads



அபிவிருத்தி பயிற்சி நெறி

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் 5ஆம் கட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி எதிர் வரும் 2013.08.05ஆம் திகதி தொடக்கம் 2013.08.10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுக்காக ஏற்கனவே 4; கட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி நெறியில் கலந்துகொள்ளாத கர்ப்பிணிகளாக உள்ளவர்கள் பிரசவ விடுமுறை பெற்று முடித்துள்ளவர்கள் 2 வயதுக்குக்குறைந்த சிறு பிள்ளைகள் இருக்கின்ற தாய்மார்கள் மற்றும் மருத்துவ சான்றிதழுடன் வைத்திய விடுமுறை பெற்றுள்ள பட்டதாரி பயிலுனர்கள் பயிற்சி நெறியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி நெறி மேற்குறிப்பிட்ப்பட்ட தினங்களில் இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் முற்பகல் 8.30மணி தொடக்கம் பி.ப4.00மணி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.