Header Ads



ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, பகுதிகளில் திருடர்களின் தொல்லை

(அனா)

ஓட்டமாவடி சேர்மன் வீதியில் நேற்று (24.08.2013) இரவு வீடு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சேர்மன் வீதியில் வசித்து வரும் எம்.பி.எம்.இர்ஸாத் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் பிறைந்துரைச்சேனையில் அமைந்துள்ள மனைவியின் சகோதரனின் வீட்டிற்கு இரவு 7.00 மணியளவில் சென்று 08.30 மணியளவில் வந்து பார்க்கின்ற போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு படுக்கையறையில் இருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரான இர்ஷாத் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவுக்குச் சென்று இரு வாரங்களுக்கு முன் நாடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற  பகுதிகளில் அண்மைக்காலமாக திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படகின்றனர்.


No comments

Powered by Blogger.