Header Ads



முஸ்லிம் சிறுவன் படுகொலை - சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

(அனா)

செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவனின் கொலையுடன் சம்மந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவனும் சந்தேக நபரான சாகுல் ஹமீட் அலி அக்பரும் கடந்த 17.08.2013ம் திகதி செம்மண்ணோடையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் ஓட்டமாவடிக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் தேனீர் அருந்திவிட்டு மடுவத்து வீதியில் ஆற்றங்கரை ஓரமாக சென்று சிறுவனை தனது இச்சைக்குப் பயன்படுத்திய பின் இருவரும் ஆற்றங்கரையோரம் விளையாடிக் கொண்டு இருக்கும் போது சிறுவன் தனக்கு சுரி மண்ணை அள்ளி எரிந்ததாகவும் பின்னர் தான் அவருக்கு கல்லால் எரிந்த போது அது தலையில் பட்டதும் அவர் மரணித்து விட்டார் என்றும் அதன் பின்னர் அச் சிறுவனின் உடலை மறைத்து வைக்கும் நோக்கில் மதில் ஓரமாக வைத்து அதன் மேல் பெரிய கற்களைத் தூக்கிப் போட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
அவர் இச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் சந்தேக நபரை நேற்று (24.08.2013) சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் இன்று (25.08.2013) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. give him death sentence that's the good punishment

    ReplyDelete

Powered by Blogger.