கட்சியை காப்பாற்ற ரணிலின் மற்றுமொரு உபாயம்..!
(Tm)
கட்சி, கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஆலோசனை குழுவொன்றை நியமித்துள்ளது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்தே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக்கட்சின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் கையாண்ட அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, காமினி ஜயவிக்ரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோன் அமரதுங்க,கபீர் ஹாசிம், டி.எம்.சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, பி.ஹரிசன், ரஞ்சித் மத்தும பண்டார ,விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வீழ்ச்சி இம்முறை நிச்சயம், அப்போது மாற்றுவழிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்பார்புகள் உள்ளன இத்தருணத்தை உம்மால் பிரயோசணப்படுத்திக்கொள்ள முடிந்தால் சரி, இல்லையேல் வேறுவழிகளும் உள்ளன.
ReplyDelete