முஸ்லிம்களை பயன்படுத்தி ஜனாதிபதியை தோற்கடிக்க முயற்சி - நாமல் ராஜபக்ஸ
(மொஹொமட் ஆஸிக்)
முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி முயற்சி செய்வதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிதத்தார்.
அக்குறணை நகரில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கண்டி மாவட்ட வேடபாளர் ரிஸ்வி பாரூக் அவரகளது வெற்றிக்காக இக் கூட்டம் இடம் பெறறது. இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
அக்குறணை பிரதேசம் சில காலங்களுக்கு முன் ஐக்கிய தேசிய கடசியின் கோட்டையாக இருந்தது. இருந்தாலும் தற்போது அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் கோட்டையாக மாறி வருகிறது. இன்று ஐக்கிய தேசிய கட்சி சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி ஜனாதிபதியும் அரசாங்கத்தையும் தோல்வி அடைய செய்ய அவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று முதலாவது சிங்கள முஸ்லிம் பேதத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதுடன், தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் தலைவர்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். ஜனாதிபதியுடன பலம் வாய்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். என்பது நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு தெரியும் என்றும் அவர் இங்கு கூறினார்.
இக் கூட்டததில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்தன, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்இ கண்டி மாவட்ட வேட்பாளர் ரிஸ்வி பாரூக், அனுராத ஜயரத்ன உற்பட பலர் உரையாற்றினர்.
Post a Comment