சலபிகளுக்கு தீவிரவாத முத்திரை குத்திய துனீஷிய அரசு
துனீஷிய நாட்டு கடும் போக்கு சலபிக்களின் அன்சார் அல் ஷரியா முன்னணியை தீவிரவாத குழுவாக அந் நாட்டின் இஸ்லாமியவாத அரசு முத்திரை குத்தியுள்ளது.
துனீஷிய அரசியல் பதற்ற த்திற்கு காரணமான இரு முன்னணி எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் கொலை செய்ததன் பின்னணியில் இந்த சலபிக்குழு செயற் பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக பிரதமர் அலி லராயத் குறிப்பிட்டுள்ளார்.
“யாரேனும் இந்த குழுவுடன் செயற்பட்டால் அவர்கள் சட்டத்திற்கு முன் முகம்கொடுக்க வேண்டி வரும்” என அவர் எச்சரித்தார். கடந்த 2011 மக்கள் எழுச்சிக்கு பின்னர் தோற்றுவிக்கப்பட்ட இந்த குழு துனீஷியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிறது.Tn
Post a Comment