மடவளையில் எமக்கு ஆதரவு கிடைத்தது கிடையாது - லொகான் ரத்வத்தை
(Hafeez)
இம்முறை தேர்தல்பரப்புரைப் பணிகளில் ஐ.தே.க.யோ ஸ்ரீல.மு.கா.கிடையாது. ஐ.ம.சு.கூட்டமைப்பு மட்டுமே தேர்தல் பிரசாரப்பணிகளில் ஈடுபடுவதாக கண்டி மாவட்டப் பாராளு மன்ற அங்கத்தவர் லொகான் ரத்வத்தை தெரிவித்தார். (25.8.2013) மடவளை நகரத்தில் ஸ்ரீல.சு.க.யின் காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்தபின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பழக்க தோசம் காரணமாக சிலர் யானையை தவிர வேறு எதற்கும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறுபவர்கள் இம்முறை வாக்களிக்கச் செல்லாமல் வீட்டிலே இருநது விடுவது நல்லது.
ஏனெனில் இன்று அரசியல் களத்தில் ஐ.தே.க.யோ ஸ்ரீல.மு.கா இல்லை என்றும் அவை இனிமேல் உயிர் பெற்று எழமுடியாத கட்சிகள் என்ற படியால் அதற்கு வாக்களிக் நினைப்பவர்கள் வீட்டில் இருந்து கொள்வது நல்லது. சிலருக்கு வெற்றிலைக்கு வாக்களிக்க மனம் வராவிட்டால் கை நடுங்கியவர்களதக வாக்களிக்த் தேவையில்லை. அமைதியாக வீட்டில் இருந்து கொள்வது நல்லது.
கடந்த காலத் தேர்தல்கள் எதனை எடுத்துப் பார்த்தாலும் மடவளை பெட்டியில் எமக்கு ஆதரவு கிடைத்தது கிடையாது. ஆனால் இம்முறை அவ்வாறு இல்லாது ஆதரவு கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன். அவ்வாறு கிடைக்கும் பட்டசத்தில் நான் 10 கோடி ரூபாய்கு மேல் இந்த மடவளைக் கிராம அபிவிருத்திக்குச் செலவிடுவேன் எனத் தெரிவித்தார்.
One of the nonsense of UPFA
ReplyDelete