அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே இந்தக் கதி என்றால் - அஸாத் சாலி
கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுத்தீனின் வீடும் அவரது உறவினர்களின் சிலரின் வீடுகளும், சில சொத்துக்களும் பொலிஸாரின் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீடுகளும் சொத்துக்களும் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் கேட்கப்பட்டபோது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்; உள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அதனாலேயே சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒரு அமைச்சரவை அமைச்சரை அவமதிப்பதற்கு இதை விட வேறு எதுவுமே தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி.
அண்மையில் கொழும்பு கிறேனட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஓரளவு கடுமையாகக் குரல் கொடுத்த ஒரு அமைச்சர்தான் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன். இந்த பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பாக அமைச்சர் பௌஸியின் வீட்டிலும்,புத்தசாசன அமைச்சிலும் நடந்த கலந்துரையாடல்களின் போது பொலிஸ் மா அதிபருடன் நேரடி தர்க்கத்தில் ஈடுபட்டவர் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன். அதன்பிறகு கிறேன்ட்பாஸ் பள்ளிவாசல் விடயத்தில் பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தனக்கு கிடைத்த ஆதாரங்களையும் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் றிஷாட்டின் இந்தக் கடிதத்துக்கு பொலிஸ் மா அதிபர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை,அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. இந்தப் பின்னணியிலேயே பொலிஸார் தமது அடாவடித் தனத்தை அமைச்சருக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஒரு அமைச்சரவை அமைச்சருக்கே வாயைத் திறந்து உண்மையைப் பேச முடியாத அளவுக்கு பொலிஸார் தமது அடாவடித் தனத்தையும் அடக்கு முறையையும் பிரயோகிக்கின்றனர் என்றால் சாதாரண பொது மக்களின் நிலைமையை கேட்கவும் வேண்டுமா?
தான் சார்ந்த சமூகத்துக்காக குரல் கொடுக்கும் எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதிகளாக்க முனையும் அரசு அதே தந்திரோபாயத்தை இந்த அரசுக்கு விசுவாசமாக அர்ப்பணத்தோடு பணிபுரியும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு எதிராகவும் பயன்படுத்த முனைந்துள்ளமை மிகவும் வேதனைக்குரியதாகும். அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்களுக்கு இதுவோர் பாடமாகும். அவர்கள் எவ்வளவு தான் அரசுக்கு வக்காளத்து வாங்கி சமூகத்தைக் காட்டிக் கொடுத்தாலும் சரி ஏதாவது ஒரு விடயத்தில் கொஞ்சமாவது வெறுப்பு ஏற்பட்டாலும் போதும் அதைவைத்தே அவர்களுக்கும் பயங்கரவாதம் பூசப்படுவது உறுதி. அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புள்ள ஒரு இடம.; எனவே இந்த விடயத்தில் அமைச்சர்கள் றிஷாட் பதியுத்தீனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பொலிஸாரின் நடவடிக்கைளை வன்மையாகக் கண்டிக்கத் தவறக் கூடாது. அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராக பொலிஸாரை பாவித்து அடாவடிகளில் ஈடுபடுவதற்கு எதிராகவும் அமைச்சர்கள் தமது கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்
அவங்களுக்கு அழிவும் சாவும் நெருங்கிவிட்டது என்றுதான் அர்த்தம் மக்களை எதிர்த்த எவனும் முன்னேற முடியாது. முன்னேறிய சரித்திரமும் கிடையாது.
ReplyDeleteஆயுதங்களை அமைச்சர்கல் ஏனைய சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் வீட்டு காணிகளில ஆயுதங்களை புதைத்துவிட்டு பிறகு அவர்களே அதை கண்டுபிடித்து , இதோ பாருங்கள் !!! பயங்கர வாதிகள் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை ..!! எனவே கட்டாயம் முடியுமான சகோதரர்கள் தங்களுடைய வீடு காணிகளில் இரகசியக் கேமரக் களை பொருத்திக்கொல்லுவது மிக நன்று ...
ReplyDeleteAll are drama....
ReplyDeleteகிராண்ட்பாஸ் பள்ளிக்கு ரிசாத் மட்டும்தான் உரத்துக் குரல் கொடுத்தார் என்றால், கொழும்பில் உள்ள உங்களுடன் சேர்த்து, உங்க மாமா பௌசி, அளவி மௌலான, முசம்மில் எல்லோரும் என்ன பொத்திக்கு படுத்திங்களா? மட்டக்கழபாந்தான் உங்கள காப்பாத்தோணும், அந்த மட்டக்கலப்பான்தான் உங்களுக்கு வாக்கும் போடணும் என்றால் உங்க கொழும்பு மக்கள் என்ன பாம்பாட்டவா இருக்கீங்க.....
ReplyDeleteஉங்களால சிங்கலவண்டத ஆட்டவும் முடியாது, புடுங்கவும் முடியாதூ... மாறாக சிங்களவண்ட கோவணத்துக்குள்ளதான் நீங்க மேலும் அடங்கி கிடைக்கணும்..... அதுதான் உண்மை.....
நாம 8ஆம் கிளாஸ் படிச்சோமா, ஒரு ஆட்டோ வாங்கினோமா, பேமென்ட்ல பிசினஸ் பண்ணினோமா, பாத்தால கொச்டில இருந்தோமா, படுத்தோம என்று மட்டும் நீங்க இருந்தா போதும்....
சும்மா உசுப்பேத்துற புழுதிய கிளப்பாம......
சும்மா சொல்லப்போடாது, ஆசாத இந்த உடைல பாக்குறதுக்கு 100% பாதர் மாதிரியே இருக்கீங்க......
All political drama.. For upcoming election
ReplyDeleteஆசாத் சாலி அமைச்சர் றிசாதுக்காக குரல் கொடுத்தது செய் நன்றிக்காகத் தான் ஆசாத் சாலி சிறைபடுத்தப்பட்ட போது வெளிநாட்டில் இருந்த அமைச்சர் உடன் நாடு திரும்பினார்.அதே போன்று அரசுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தார்.ஏன் ஆசாத் சாலி அரசாங்கத்தின் பிரதி என்றதாலா?இல்லை கலிமாவின் உறவு தான் அது...அதை புரிந்து கொள்ள முடியாத ஜன்மங்கள் அசிங்மான கருத்துக்களை கூறுகின்றனர்.இவ்வாறான அசிங்கமான கருத்துக்களை ஜப்னா முஸ்லிம் தவிர்ப்பது அதனது பயணத்திற்கு பேருதவியாகும்.
ReplyDeleteMR SLAHY NAANUM ASAD SAALIYIN PHOTOVEI PARTHU VITTU FATHER YENRU NIRAIYA THADAVAI YAMAANTHULLEN. KAARANAM AVER KAIYIL IRUKKUM MADI KANANI FATHERIN KARUPPU PATTI POL THERIVATHAAL
ReplyDelete