Header Ads



இப்படியும் ஒரு ஜனாதிபதி

மரணம் அடைந்த சாவேஷ் கல்லறையில் படுத்து தூங்குவதாக வெனிசுலா அதிபர் மதுரோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபராக இருந்த ஹூகோ சாவேஷ் புற்று நோய் பாதித்து கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இவரது ஆட்சியில் நிகோலஸ் மதுரோ துணை அதிபராக பதவி வகித்தார்.

இவர் சாவேசின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே, அவரை தனது ஆரசியல் வாரிசாக சாவேஷ் அறிவித்தார். இதற்கிடையே சாவேஷ் மரணத்தை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14–ந்தேதி புதிய அதிபர் தேர்தல் நடந்தது.

அதில், நிகோலஸ் மதுரோ அமோக வெற்றி பெற்று புதிய அதிபரானார். தேர்தல் பிரசாரத்தின்போது, சாவேஷ் சிறிய பறவையாகி தன்னை சுற்றி பறந்து கொண்டிருப்பதாக உணர்ச்சிகரமாக பேசினார்.

தற்போது சாவேஷ் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார். மறைந்த அதிபர் சாவேஷின் உடல் முன்னாள் ராணுவ அருங்காட்சியகத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

அதன் மீது கட்டப்பட்டுள்ள கல்லறையில் சில இரவு நேரங்களில் படுத்து தூங்குவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். அப்போது சாவேசின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் தனக்கும் ஏற்பட்டு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

1 comment:

  1. Ivaru enna namma janathipathi mahinda saar ei vida sirandhavara

    ReplyDelete

Powered by Blogger.