குப்பனின் கவலை..!
பைக்கில், கூடுகட்டி, மூன்று ஆண்டுகளாக, அதில் வசித்து வருகிறது, ஒரு குருவி. இப்போது அதில் முட்டையிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நெகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், 60. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். கடந்த, 10 ஆண்டுகளாக, ஒரே பைக்கை பயன்படுத்தி வருகிறார். ஒருநாள், பைக்கை, "ஸ்டார்ட்' செய்த போது, "டூல்ஸ் பாக்ஸ்' உள்ளே இருந்து, குருவி ஒன்று பறந்து சென்றது. குருவி, அதில் கூடு கட்டி வசித்ததைக் கண்ட அவர், அதை கலைக்கவில்லை. தினமும் மாலையில், பைக்கை, வீட்டில் கொண்டு வந்து விட்ட சிறிது நேரத்துக்குள், பைக்கில் கட்டியிருந்த கூட்டுக்குள், குருவி வந்து அடைந்து விடும்; இரவில் வீடு திரும்ப நேரமானால், அருகே உள்ள மரத்தில், காத்திருந்து, பைக் வந்த பின், அடைந்து கொள்ளும். ஒரு முறை, பைக்கை பழுது நீக்க விட்ட போது, ஊழியர்கள், கூட்டை பிய்த்து எறிந்து விட்டனர். அதை, குருவி பொருட்படுத்தவில்லை; பைக்கில் அதே இடத்தில், மீண்டும் கூடு கட்டி அடையத்துவங்கியது. இதன் பின், குப்பன் பைக்கை சர்வீசுக்கு விடுவில்லை; தானே கழுவி சுத்தம் செய்து கொள்கிறார்; டூல்ஸ் பாக்சையும் திறப்பது இல்லை. பைக்கில் கட்டிய கூட்டில், மூன்று ஆண்டுகளாக, குருவி வசிக்கிறது. கடந்த, 4ம் தேதி, பைக்கில் செஞ்சி வந்தார் குப்பன். திரும்பி செல்ல முயன்றபோது, குருவி முட்டை ஒன்று, பைக் அருகே உடைந்து கிடந்தது. உடனே, டூல்ஸ் பாக்சை திறந்து பார்த்தார். அங்கு ஒரு முட்டை இருந்தது. பைக்கை ஓட்டிய போது, அதிர்வில், கூட்டில் இருந்து விழுந்துள்ளது. இப்போது, அந்த முட்டையை பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறார். முட்டையில் இருந்து, குஞ்சு வெளியே வந்தபின், பைக்கை வெளியே எடுத்தால், குஞ்சுக்கு உணவு எப்படி கிடைக்கும் என்பது தான், இப்போது குப்பனின் கவலை.
குப்பனின் மனதுக்கும், நம்மத்தியில் உலாவும் மஞ்சள் குப்பாடிகளின் மனதுக்கும் ரெம்பவும்தான் தூரம்!
ReplyDeleteஒரு குருவியின் கூட்டடைக் கலைக்க விரும்பாமல் போதி மாதவன் பிறந்த மண்ணில் அப்படியொரு நிலைமை!
பல கோயில்களையும், பள்ளிகளையும் உடைப்பதிலேயே அவன் புத்த மதம் தளைத்த மண்ணில் இப்படியொரு நிலைமை!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-