Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு மீனவ சமூகம் பாராட்டு

(ஏ.எல்.ஜுனைதீன்)

  மறைந்த மாமனிதர் மர்ஹும் எம் எச்.எம்.அஷ்ரபினால் 1998 ஆம் ஆண்டிற்கு முன் கனவு கண்ட ஒலுவில் மீன்பிடி மற்றும் வணிகத் துறைமுகம் அன்னாரின் மறைவுக்குப் பின்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பல்துறை மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அன்று பதவி ஏற்று இதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்ததன் காரணமாக இன்று அன்னாரின் கனவை நனவாக்கியுள்ளார் என  மீனவர் சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைப் பாராட்டியுள்ளது.
  அமைச்சர் ரவூப் ஹக்கீம் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரபின் கனவை நனவாக்குவதற்கு அவருக்கு அன்று வழங்கப்பட்டிருந்த  அந்த அமைச்சுப் பதவிகள் மூலம் இத் துறைமுகத்தை இங்கு அமைப்பதற்குப் பெரும் பாடுபட்டார் என்பதை மீனவர் சமூகம் இப்பிரதேச மக்களுக்கு நினைவூட்டியுள்ளது

 மர்ஹும் அஷ்ரபின் கனவு தேசத்தின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையினூடாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் துரித நடவடிக்கையின் காரணமாகப் பூர்த்தி செய்யப்பட்டு அது நனவாகி செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படுகின்றது. இது இப்பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இத்திறப்பு விழாவுக்கு மறைந்த அஷ்ரபின் கனவை நனவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாக அழைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

  இதேவேளை,  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள், மீனவர்களின் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றதாகவும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர் தெரிவித்தார்..

No comments

Powered by Blogger.