கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்ந்து இயங்கலாம் - பௌத்தசமய விவகார செயலாளர் உறுதி
கொழும்பில் சர்ச்சைக்குரிய பள்ளிவாசலாக காண்பிக்கப்பட்டுவரும் கிரேண்பாஸ் பள்ளிவாசலுக்கு 06-08-2013 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன்இவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் ஆகியோர் விஜயம்செய்து பள்ளி நிர்வாகத்துடன் கலந்துரையாடியதுடன், மத விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் பிராந்திய சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பள்ளிவாசலினை தொடர்ந்து இங்கு இயங்க வைப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
அண்மையில் வவுனியாவுக்கு வருகைத்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீ்ன் கொழும்பு கிரேண்ட்பாஸில் இயங்கிவருகின்ற பள்ளிவாசல் தொடர்பில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன்இஇந்த பள்ளிவாசலுக்கு மத விவகார அமைச்சு காலக்கெடு வழங்கியுள்ள விடயத்தை சுட்டிக்காட்டினார்.அதற்கு பதிலளித்த ஜனாதிபதி இந்த பள்ளிவாசல் மூடப்படமாட்டது என்ற உத்தரவாதத்தை அளித்திருந்த நிலையில்இஅமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலனா குழுவினர் 06-08-2013 இரவு கிரேண்டபாஸ் பள்ளிக்கு விஜயம் செய்துள்ளனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மதவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு இப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் எற்பட்டுள்ள பீதி நிலையினையும், மத வழிபாட்டுத் தளமானது உரிய முறையில் பதியப்பட்டுள்ளதாகவும், அதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை விளக்கி கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட செயலாளர், விளக்கிக் கொள்வதற்கான கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும்இதொடர்ந்து முஸ்லிம்கள் பள்ளிவாசலில் மதக் கடமைகளை முன்னெடுக்க முடியும் என்ற உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.அதேவேளை பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இந்த விடயங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்ப மஹியங்கனை பற்றி பேச மாட்டிங்களா? இல்ல பேச விடமாட்டங்களா?
ReplyDeleteஅப்ப மஹியங்கனை பற்றி பேச மாட்டிங்களா? இல்ல பேச விடமாட்டங்களா?
ReplyDeleteAllah akbar
ReplyDeleteYa ALLAH !
ReplyDeleteunathu Masjidai maydkondu sel wathakku, anniyaridam anumathi pera wendi ullath !
ne pothumaanawan!
Shaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaah! Agents of government for Muslim community. Mahinda listens who are shaking hands with him only. Not for SL Muslim Community. Good joke will come out step by step. Let's wait!!!!!!!!!!!!!
ReplyDeleteஇதெல்லாம் இப்பள்ளிவாசல் பிரச்சினை முளை விட்ட நேரத்திலேயே ஒரு கெபினட் அமைச்சராக இருந்த நீங்கள் ஒரு டெலிபோன் கோளில் கதைத்துச் செய்திருக்கக்கூடிய வேலை.
ReplyDeleteஇதற்கு வட மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு வரும் வரை காலதாமதம் செய்திருக்கிறீர்கள் என்பதையே என்போன்றவர்களுக்கு இச்செய்தி எடுத்துரைக்கின்றது.
இப்பள்ளிவாசல்மீது சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பல் விடுத்திருந்த அச்சுறுத்தல் பற்றி ஊடகங்கள் பலவற்றிலும் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் நீங்கள் ஏன் ஜனாதிபதியையும், மத விவகாரங்களுக்கான செயலாளரையும், சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவில்லை?
காலம் கனிந்து வரும் வரை காத்திருந்தீர்களா?
எல்லாம் வட மாகாண தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறிவைத்து எடுக்கப்படும் ஒரு இடைக்கால நடவடிக்கைகளே தவிர, எமது சமூகத்தை எதிர்கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரின அடக்குமுறையாளர்களின் நிகழ்ச்சி நிரலை முற்றாக இல்லாதொழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாகத் தெரியவில்லை.
இதையே நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடமும், மத விவகாரங்களுக்கான செயலாளரிடமும் எடுத்துக் கூறியிருப்பின் இப்படியொரு விளைவு ஏற்பட்டிருக்குமா...?
வடக்கில் உங்களை கருவியாகப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறும் மந்த வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது நன்கு புலனாகின்றது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
See All are politics!
ReplyDeleteThere is an Election so they act a drama/ They fight and get a solution.
Masha allah,
ReplyDeleteMasha allah,
ReplyDeleteஅல் ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் என்ற எண்ணம் உமக்கு உள்ளது என்பதை தேர்தலுக்கு முன்னரே மற்றவர்களை விட நீர் நிருபித்துவிட்டீர்.
ReplyDeleteகுறிப்பு: ஜப்னா முஸ்லிம் பக்கத்தில் வெளியாகியுள்ள முஸ்லிம்காங்கிரஸ் இன் தேர்தல் பிரச்சார விளம்பரத்தை கவனியுங்கள் அதில் சொல்லப்பட்டுள்ள வாசங்களை கொஞ்சம் கவனியுங்கள். முஸ்லிம் சமுதாயங்களுக்கு இவ்வளவு நடந்தும் இவர்கள் என்ன செய்துள்ளார்கள்? ஆனால் தேர்தல் வந்ததும் அவர்களையும் மறந்து பொய் சொல்ல தேர்தலுக்கென்று அவர்கள் வைத்துள்ள அதே வசைப்பாட்டை வெறுமனே பாடுகின்றார்கள். இதிலிருந்து புரிகின்றது இவர்களது உண்மை நிலை. வாய் கூசாமல் எப்படி மனச்சாட்சிக்கு மாறாக இவர்களுக்கு இப்படி வார்த்தைகள் வருமோ தெரியவில்லை. எது எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் வாக்கிடும் நேரம் நமது தெரிவுகள் நல்லவைகளாகவும் தீயவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைவது மிக மிக அவசியம். அதிகம் யோசிக்கத்தேவையில்ல நமக்கு இது வரைக்கும் நல்லது செய்யதவர்களை உடனே தெரிவுகளிலிருந்து தவிர்த்து வீட்டுக்கனுப்புவோம் இவர்கள நம்பி இனிக்காரியம் ஆகாது. எமது சமுதாயத்திற்காக அரசாங்கத்திடம் குரல் கொடுத்து உரிமைகளைப்பாதுகாக்கும் தலைவர்களைத் தெரிவுசெய்வோம். அவர்களுக்கே எமது வாக்குகளை இடுவோம்.
ராஜபக்ச அன் கோ வின் அடிமை சேவகனாய் தான் பார்கிறேன்
ReplyDeleteஇந்த பள்ளிவாசலை மூடுமாறு குழப்படி செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கலா..??
இவர்களால் ஒரு சமூகத்தின் மத உணர்வு, சுய மரியாதை, உரிமை என்பன பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் உணர்வாரா...???
இல்லை எனது முயற்சியால் தான் இந்த பள்ளி வாசல் திறக்கப்பட்டுள்ளது என்று அரசியல் செய்வாரா...????
அல்ஹம்துலில்லாஹ், முதலில் மேலான அல்லாஹ்வுக்கு நன்றி செழுத்தி, பின் இந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயல்பட்ட அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி செழுத்தி, பின் அமைச்சு செயலாளருக்கும் நன்றி கூறி, விஷேசமாக அமைதியான முறையிலும் வெற்றி முழக்கங்கள் முலங்காமலும் மக்கள் தமது தொழுகை மற்றும் கடமைகளில் ஈடு படுவது மிக முக்கியமாகும்.
ReplyDeleteஒவ்வொரு தாஇயும் பள்ளியினுள் நுழையும் ஒவ்வொரு முறையும் தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு ரகஅத் தொழுது வந்து மஸ்ஜிதினதும் ஜமாஅத்தினரதும் உறுதியை துஆக்கள் மூலம் பலப்படுக்கொள்ளல் சாலச்சிறந்ததாகும்.
Periya saaadane Senji Irukaaaru , Kinnas Bookla eluduwom, ellaaanum Keriyanuwal, Vote election varakolla Poadra Nnarith thnadirem engalta palikaaadu
ReplyDeleteAllahu akbar alhamdulilla allah ungalukku rahmath seywanaha aamin
ReplyDeleteIt is a drama the politicians are actors we public's are fool's
ReplyDelete